வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக்கொள்கை -அமித் ஷா

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: நான் இன்று இந்தூருக்கு வந்திருக்கிறேன். இந்தூர் அதன் தூய்மை, சுவை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. இன்று முதல் இந்தூர் பசுமை நகரம் என்று அழைக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, நமது இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு.

புதிய கல்விக் கொள்கை

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களை நமது பண்டைய கலாசாரத்துடன் இணைக்கும். புதிய கல்விக் கொள்கை நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான நடவடிக்கைக்காக, மத்தியப் பிரதேச அரசை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் ஹிந்தியில் அமல்படுத்தப்பட்டது.

பொருளாதார தலைநகரம்

மும்பையை நாட்டின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கிறோம். அதே போல் இந்தூர் மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரம். கல்வி மையமாக இந்தூர் வேகமாக முன்னேறி வருவது மகிழ்ச்சியான விஷயம். மத்தியப்பிரதேச மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற் ...

“திருவனந்தபுரத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல..” – பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த ...

பிரதமர் மோடியை சிலிர்க்கவைத்த சிறுமியின் கைவண்ணம் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் ம ...

மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெரு ...

சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் பிரதமர் நரேந்திரயின்  மோடி உரை சிக்‌ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...