பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கி புலிகளை பூங்காவில் திறந்து விட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப் படுகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப்பின் சிவிங்கி புலிகள் வந்துள்ளன. ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து போயிங் – 747 சிறப்பு ரகவிமானம் மூலம் எட்டு சிவிங்கிப்புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இதில் 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப்புலிகள் அடக்கம்.
நமீபியாவில் உள்ள வின்டோக் தேசிய பூங்காவில் வளர்ந்த இந்தசிவிங்கிப் புலி குட்டிகள் விமானம் மூலம் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் வந்தன.பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவில் கொண்டுவரப்பட்டன.
ஷாங்காய் கூட்டுறவு உச்ச மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, நள்ளிரவில் இந்தியா திரும்பியகையோடு மத்தியப் பிரதேசம் வருகை தந்துள்ளார். தனது பிறந்தநாளில் நமீபியாவில் இருந்துவந்த இந்த சிவிங்கிப் புலிகளை தேசிய பூங்கா வனத்தில் தற்போது திறந்துவிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான் பிரதமருடன் உடனிருந்தார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று கூறிய பிரதமர், இந்த சாத்தியப்படுத்திய நமீபிய அரசுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள் என்றார்.
இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்தது வருந்தத்தக்க ஒருநிகழ்வு, இருப்பினும் தற்போதைய அரசு புதிய ஆற்றலுடன் சிவிங்கிபுலிகளின் வசிப்பிடமாக இந்தியாவை மீண்டும் மாற்ற உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பூங்காவுக்கு தலையில் தொப்பி, கூலர்ஸ் ஆகியவற்றை அணிந்து வருகைதந்த பிரதமர், சிவிங்கிப் புலிகளை திறந்துவிட்டவுடன் அவற்றை பார்த்து ரசித்து தன்னிடம் இருந்து கேமராவில் அதைபுகைப்படம் எடுத்தார்.
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்னரே சிவிங்கிப்புலிகள் பல வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2020 ஆண்டு முதல் இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகளை கொண்டுவந்து வளர்க்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்துவரும் நிலையில், மேலும் சில தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |