ஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்

ஊரடங்கு மீ்ண்டும்தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார்.

அவர் பேசியது ஒரு வைரஸ் உலத்தில் பெரும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்துபோராட வேண்டியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் இதற்குமுன்பு பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இதுநிச்சயமாக மனிதகுலத்திற்கு கற்பனைசெய்ய முடியாதது. இது முன்னர் நடந்திராதது. ஆனால் இந்தவைரஸிடம் மனிதகுலம் தோற்காது. நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முன்னேற வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுயசார்பு அடைவது உலகத்திற்கே நல்லசெய்தி. உலகத்திற்கே, இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும் என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தியா இந்த இக்கட்டான நிலையை, வாய்ப்புகளை உருவாக்குவ தற்கான இடமாக மாற்றிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டு மக்களுக்கு உதவிவருகிறது

இந்தியாவின் 5 தூண்கள் இவைதான்: பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் இயக்கம், துடிப்புள்ள மக்கள்தொகை தேவை. நான் இன்று ஒருசிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறேன். நாட்டுக்கான இந்த சிறப்பு பொருளாதார நிவாரணதொகுப்பு 20 லட்சம்கோடி மதிப்புள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% ஆகும் என்றார்.

அவர் உரையில் முக்கிய அம்சங்கள்:

* கடந்த 4 மாதங்களாக உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திவருகின்றன. நமக்கு இது ஒருபுதிய அனுபவம், எதிர்பாராத பாதிப்பு.

* உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்போது முக்கியகட்டத்தில் இருக்கிறோம்.

* கரோனா பாதிப்பு தொடங்கிய போது நம்மிடம் பிபிஏ கிட்கள் கிடையாது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிட்களை நாமே தயாரிக் கிறோம்.

* கரோனாவுக்கு எதிரானபோரில் நாம் கட்டாயம் வெற்றிபெறுவோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக் கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. 130 கோடி இந்தியர்களும் இதற்காக உறுதி ஏற்போம்.

* கரோனா பாதி்ப்பால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம்கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்புபணிகளுக்கு செலவிடப்படும்.

* பொருளாதார மீட்பு நடவடிக்கைான திட்டங்கள் மற்றும் ஊரடங்கு பெரும் தளர்வுகளுடன் மீண்டும் அமல்படுத்தபடும். மாநில அரசின் முடிவுகளின்படி இது இருக்கும்.

* இதுகுறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...