H.M.P வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ஜேபி நட்டா

”சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி., நோய்த்தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறினார்.

அவர் கூறியதாவது:

எச்.எம்.பி.வி., என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, 2001ம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல்லாண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ், காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். வசந்தகாலத்தின் ஆரம்ப நாட்களிலும் பரவும்.

சீனாவில் சமீபத்தில் பரவி வரும் வைரஸ் தொடர்பான சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும் சூழலை மிகுந்த பொறுப்புடன் கண்காணித்து வருகிறது. விரைவில் அதன் அறிக்கையை நமக்கு அளிக்க இருக்கிறது. சுவாசக்கோளாறு தொடர்பான நோய்க்கிருமிகள் பாதிப்பில் திடீர் அதிகரிப்பு எதுவும் இந்தியாவில் இல்லை என்பது தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.நிலைமையை ஆய்வு செய்ய, சுகாதாரப்பணிகள் பொது இயக்குனர் தலைமையில் கூட்டுக்குழு கூட்டம் ஜன.,4ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் முழுமையான கண்காணிப்பில் உள்ளனர்.

சுகாதார ரீதியில் ஏற்படக்கூடிய எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...