நாளொன்றுக்கு ஒருலட்சம் கரோனா பரிசோதனை

நாளொன்றுக்கு ஒருலட்சம் கரோனா பரிசோதனை நடைபெறுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ்சந்திர மர்மு, லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடன் கரோனாபரவல் தடுப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:

‘2020 மே 12ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 70,756 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 22,455 பேர் குணம் அடைந்துள்ளனர். 2,2,93 பேர் இறந்துள்ளன்ர. கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியபட்டுள்ளது, 1538 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கடந்த 14 நாட்களில், நோய் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களாக இருந்தது, கடந்த 3 நாட்களில் இது 12.2 ஆக உயர்ந்துள்ளது. மரணவிகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 31.74 சதவீதமாகவும் உள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி, சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 2.37 சதவீதம்பேர் ஐ.சி.யூ. சிகிச்சையிலும், 0.41 சதவீதம் பேர் வென்டிலேட்டர்கள் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.82 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் இருக்கின்றனர்.

நாட்டில் கோவிட் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளது. 347 அரசு ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் 1 இலட்சம் பரிசோதனைகள் நடத்தபடுகிறது.

இது வரையில் 17, 62,840 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. நேற்று 86,191 சாம்பிள்கள் பரிசோதிக்கப் பட்டன. நாளொன்றுக்கு ஒருலட்சம் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கரோனாவால் உயிரிழப்பை பொறுத்தவரை உலக அளவில் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...