இதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள்

நிர்மலா சீத்தா ராமன் மிகபெரும் பொருளாதார நல திட்டங்களை அறிவித்திருக்கின்றார், நிச்சயம் நாட்டினை இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்கும் மிகபெரும் காரியமிது

பெட்ரோல் ஏன் அந்தவிலைக்கு விற்றது? ஏன் அதை செய்யவில்லை? ஏன் இதை செய்யவில்லை என வழக்கமாக ஏக கேள்வி கேட்கும் யாரும் இந்த 20 லட்சம் கோடி இந்தநெருக்கடியான நேரத்தில் எப்படி வந்தது என ஒருவார்த்தையும் கேட்கவில்லை

வாழ்க அவர்களின் தேசபற்று

மோடி அரசு சிக்கனமாக இருந்தது, அவர்களுக்கு கலர் டிவி கொடுக்க தெரியாது, அம்மா உணவகம் அமைக்க தெரியாது, சமத்துவ புரம் அமைக்க தெரியாது, இலவசமாக மிக்ஸி கிரைண்டர், ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலமெல்ல்லாம் கொடுக்கதெரியாது

அவர்களுக்கு நாட்டுக்காக திட்டமிடதெரியும், அவசர காலத்துக்கு நிதி சேர்க்க தெரியும், சேர்ந்திருக்கும் நிதியின் ஒருபகுதியினை எப்பொழுது களமிறக்க வேண்டும் என்பதும் தெரியும்

இதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீசி விட்டார்கள், எப்பொழுது எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்தார்கள்

அமெரிக்கா சர்வ சக்தி வாய்ந்த பொருளாதார நாடு, அரபு நாடுகள் எண்ணெய் விலை 0 க்கு விற்றாலும் இன்னும் ஈராண்டு தாங்குமளவு ரிசர்வ் வைத்துள்ளன‌

சீனாவிடம் குவிந்திருக்கும் பணம் அதிகம், சிலஆண்டுகள் தாக்குபிடிக்க முடியும், மகாமுக்கியமாக 70 ஆண்டுகளாக ஒரே ஆட்சி

ஆனால் இந்திய அரசு சட்டென 20 லட்சம் கோடியினை எடுத்து வீசியிருப்பது உலக அரங்கில் உற்று நோக்கபடுகின்றது, எப்படி சட்டென எடுத்தார்கள்? அதுவும் மூன்று மாதம் தொழில் முடங்கியிருக்கும் பொழுது எப்படி எடுத்தார்கள்?

ஆம், மிகசரியான முன் தயாரிப்பில் இருந்திருகின்றார்கள். முன் சேர்த்த நிதி நீண்ட காலங்களுகான நிதி எல்லாம் சேர்த்து களத்தில் இறக்கி விட்டார்கள்

ஜி.எஸ்டி பற்றி பேசிய பொருளாதார நிபுணர்களையோ, பெட்ரோல் விலை ஏன் என கேட்ட அறிவு ஜீவிகளையோ இன்னும் பலரையோ இப்பொழுது காண முடியாது

மக்கள் பணம் மக்களுக்கே கொடுக்கபட்டிருக்கின்றது

உடல் இயங்க ரத்தசுழற்சி அவசியம், நாடு இயங்க பண சுழற்சி அவசியம். உடலுக்கு சிக்கல் வந்தால் எப்படி காப்பாற்ற ரத்த ஒட்டம் தடையின்றி செய்யவேண்டுமோ அப்படி தேசத்துக்கும் செய்திருக்கின்றது அரசு

இந்த ஏற்ப்பாட்டால் தொழில் உலகம் முடங்கிபோகாது, ஆசுவாசம் கிடைக்கும். ஓரளவு சுழற்சி அதிகரிக்கும் அது தேசத்தை காக்கும்

நிர்மலா சீத்தா ராமனின் ஒவ்வொரு வரிகளையும் கவனியுங்கள், எதெல்லாம் மகா முக்கிய துறைகளோ, எதை எல்லாம் காக்கவேண்டுமோ அதை எல்லாம் ஒன்று விடாமல் சரியாக காத்திருக்கின்றார்

மிகபெரும் நலதிட்டத்தை மிக அசாத்தியமான செயல்திட்டத்தை மிக இக்கட்டான நேரத்தில் செய்து தேசம் காத்திருக்கின்றார் மோடி

இப்பொழுதும் ஆலமரத்தடியிலோ இல்லை மண்சுவரின் ஓரத்திலும் மல்லாக்க கிடந்து கட்டை பீடி இழுத்து கொண்டு இதனால் எனக்கென்ன எனகேட்பான் அல்லவா?

அவன் திக , திமுக என தேச விரோத கட்சிக்காரனாக இருப்பான், அவனுக்கு இந்தியா நன்றாக இருப்பதோ உருப்படுவதோ ஒரு காலமும் பிடிக்காது

அவனிடம் பேசவே பேசாதீர்கள், பேசி ஒன்றும் ஆகபோவதில்லை.

நன்றி ஸ்டான்லி ராஜன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...