தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ஆட்சியாளர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் திமுக.,வினரின் குடும்பஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யார் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவர பட்டியலையும், ஊழல் விவரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடியை இருஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.
இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது : கண்ணதாசன் எழுதியவனவாசம் என்ற புத்தகத்தில் ஒரு விஷயத்தை எழுதி உள்ளார். ” ரயிலில் கருணாநிதியும், நானும் பயணம் செய்தோம். பயணம் செய்யும் போது ஒரு ஏழை பழக் கூடையை வைக்கின்றார். கழிவறைக்கு சென்று விட்டார். இதனை திருடலாமா என்று கருணாநிதி கேட்டதாக கண்ணதாசன் எழுதியுள்ளார். அன்று துவங்கியது ஊழல், திருட்டு, இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. நான் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோதானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21 ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு – ரூ.5,442.39 கோடி
கே.என்.நேரு – ரூ.2,495.14 கோடி
கனிமொழி- ரூ.830.33 கோடி
கலாநிதிமாறன் – ரூ.12,450 கோடி
டிஆர் பாலு – ரூ.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – ரூ.579.58 கோடி
கலாநிதி வீராசாமி – ரூ.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி – ரூ.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு – ரூ.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி
உதயநிதி – ரூ.2,039 கோடி
சபரீசன் – ரூ.902.46
ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38,827.70 கோடி
மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)
,”2006 இல் இருந்து 2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அனுமதி கிடைக்கிறது. இந்ததிட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59 சதவீதமும், மத்திய அரசு 15 சதவீதமும், மாநிலஅரசு 21 சதவீதமும் நிதி உதவி அளித்தன. மொத்த திட்டசெலவு ரூ. 14 ஆயிரம் கோடி. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக இந்தடெண்டரைக் கொண்டு வருகிறார்கள். 5.5.2010ம் ஆண்டு மத்திய அரசு எக்சிஎம் பாலிசியை கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஒருடெண்டரில் கலந்துகொண்டால் அதை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எக்சிஎம் பாலிசி கொண்டு வரப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 14.5.2010 ம் தேதி, ஆதாவது ஒன்பதே நாளில் டெண்டர் வெளியிடுகிறது. இதில் 3 நிறுவனங்கள் கலந்து கொள்கிறன. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது ஒரு திருத்தம் கொண்டு வருகிறார்கள். டெண்டரில் சுங்க வரியை சேர்க்கப் போகிறோம் என்று திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதற்குள் நிதி தொடர்பான கோரிக்கைகள் (financial bid ) சமர்பிக்கப்பட்டு விட்டன.
ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் சுங்க வரியை சேர்க்க கூடாது என்று எக்சிஎம் பாலிசி கூறுகிறது. சுங்க வரி சேர்ப்பதற்கு முன்பு ரூ.1417 கோடி கோரி இருந்த சீனாவைச் சேர்ந்த நிறுவனம் டெண்டருக்கு தகுதி பெற்று இருந்தது. இரண்டாது இடத்தில் ரூ.1434 கோடியுடன் ஆல்ஸ்டாம் நிறுவனம் உள்ளது. சுங்க வரி சேர்த்த உடன் இரண்டாவது இருந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் முதல் இடத்திற்கு வருகிறது. டெண்டர் முடிந்த பிறகு சுங்க வரியை திருப்பி கொடுத்து விட்டார்கள். ஆனால் டெண்டர் ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது.
உலக முழுவதும் பொருட்களை விற்பனை ஆல்ஸ்டாம் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 772 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எங்களின் நேரடி குற்றச்சாட்டு முதல்வருக்கு 200 கோடி ரூபாய் ஆல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 நாடுகளைச் சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூ.200 கோடி மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த துறை அப்போது மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. இது தொடர்பாக நானே சிபிஐக்கு புகார் அளிக்க போகிறேன். மத்திய அரசின் 15 சதவீத நிதி உள்ளதால் இந்த விசாரிக்க சிபிஐக்கு உரிமை உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |