தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சி மன்னார்புரம்பகுதியில் நேற்று (மார்ச் 23) பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்த கூட்டம் போதும். திருச்சியில் கடல்அலைகள் போன்று பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே தலைமை ஏற்கவா என்று நாங்கள் சொல்கிறோம். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி ஆர்.பாலு ஓரமாக இருந்தனர். இதுதான் சமூக நீதியா? இந்தி தெரியாது, அகநானூறு தெரியாது, புறநானூறு தெரியாது . ஆனால் 200 தெரியும். திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் உறுதிமொழி ஏற்கிறோம். திமுக பொய்பிரசாரம் செய்கிறார்கள். ஒருகுடும்பம் வாழ அனைவரும் ஓடி, ஓடி உழைக்க போகிறீர்களா?இல்லை சாமானிய மக்களுக்கு உதவி செய்யும் பாஜகவுடன் இருக்க போகிறீர்களா? 2026 ம் ஆண்டு திமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. திமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் கோட்டையைபிடிக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |