கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்குமுன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கின. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் வருகை தந்த போதே டெல்லியில் கலவரம் வெடித்தது. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவியது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தபிரச்சனைகளால் பொருளாதார பிரச்சனைகள் மோசமாகின.

ஆனால் 130 கோடி மக்கள் தொகைகொண்ட ஒரு நாட்டிற்கு, 83 ஆயிரம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 3 ஆயிரம் இறப்புகள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ரஷியாபோன்ற வல்லரசு நாடுகளைவிட எண்ணிக்கை மிகக்குறைவு.

இதனால் கடந்த சிலமாதங்களில் மோடியின் மீதான மதிப்பீடுகள் உயர்ந்து உள்ளன, இந்த நெருக்கடியான காலத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை விட, பிரதமர் மோடி, வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்.

வைரசால் ஏற்படும் பெரும் பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டால், பிரதமர் மோடி, மிக வலுவான தலைவராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவரின் புகழ் உயர்ந்துகொண்டே வருகிறது.

மோடி, எதேச்சதிகார போக்கு கொண்டவரல்ல; அனைவரையும் அரவணைத்து செல்பவர். அதனால்தான், ஊரடங்கு காலத்தில், பிரதமர் மோடி வெளியிடும் வழிமுறைகளை, கோடிக்கக்கணக்கான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.பிரதமர் மோடி, கொரோனா வைரசை குறைத்து மதிப்பிட வில்லை. நோயின் பரவலைத் தடுக்க, கொள்கை வேறுபாடுகளை மறந்து, அனைத்து மாநில அரசுகளுடனும், ஒன்றிணைந்து செயலாற்றிவருகிறார். கிட்டத்தட்ட, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை, மிகக் குறைந்து காணப்படுவதற்கு, முக்கிய காரணமாக, பிரதமர் மோடி திகழ்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதி ஒரேமாதிரியாக உணர்கிறது என்று கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. பல இந்தியர்கள் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

பலநாடுகளில் ஆன்லைன் ஆய்வுகள் செய்யும் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட், மற்ற உலக தலைவர்களைவிட மோடி சிறப்பாக செயல்படுவதாக கூறி உள்ளது.

டிரம்ப், புதின், ஜெர்மனி பிரதமர் மெர்கல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலரைவிட அவரது புகழ் 80 சதவீதம் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கருத்துக்கணிப்பில் 93.5 சதவீதம் பேர் மோடி கொரோனா வைரஸ் நெருக்கடியை திறம்பட கையாளுவதாக தெரிவித்து உள்ளனர். 93 சதவீதத்துக்கும் அதிகமான பேர் மோடி அரசு நெருக்கடியை திறம்பட கையாளும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...