ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கினார். அதில், விவசாயிகளுக்கு உதவும்வகையில், வரலாற்று சிறப்புமிக்க திருத்தத்தை, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் வேளாண் விளை பொருட்களை விற்பனைசெய்ய இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். வேளாண் துறையை மறு மலர்ச்சி அடைய செய்யும் வகையிலும், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலான தொலை நோக்கு திட்டம் இது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மேலும், காய்கறிகள், எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து விடுவிக்கப் படுவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |