பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.

தற்போது நிலவிவரும் சுகாதார நெருக்கடியின் போது, இருநாடுகளிலும் உள்ள குடிமக்களின் நலனை உறுதிசெய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.

பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்துஅனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒருவேளை கொரோனாவிற்கு தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாக கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத்திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப் படும் என்று தெரிவித்தார்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒருமுக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் குறிப்பிட்டார்.விரைவில் பிலிப்பைன்சின் தேசியதினத்தை முன்னிட்டு, அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...