லடாக்கிலே என்ன பிரச்சினை?

லடாக்கின் பிரச்சினை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள கூடியது. சில்க் ரோட் எனப்படும் பட்டுவழிச் சாலையிலே லடாக் ஒரு முக்கிய இணைக்கும் புள்ளி. சீனா பாக்கிஸ்தான் பொருளாதாரவழி எனும் திட்டத்தின் எல்லா ரோடுகளும் போக வர லடாக் முக்கியமான இடம்.

இதனால்தான் தெற்கு திபெத் எனப்படும் அருணாச்சல் பிரதேசத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் சீனா லடாக்கின் மீது குறியாக இருக்கிறது.

ஆனால் அதான் இந்த பிரச்சினை 70 வருசமா இருக்கே இப்போ என்ன புதுசான்னா?

நமது அரசு இப்போது அங்கே நல்ல சாலை வசதிகளை அமைக்கிறது. இது சீனாவுக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால் நல்ல சாலை வசதிகள் இருந்தால் ராணுவம் விரைவாக அப்பகுதியை அடையும்.

அதுமட்டும் தானா பிரச்சினை என்றால் இல்லை. 370 ஐ நீக்கியதும் சீனாவுக்கு பெருத்தபயத்தை கொடுத்திருக்கிறது.370க்கு முன்பு வரை லடாக் பகுதி கவனிக்கப்படவே இல்லை. காஷ்மீரத்து விலைபோன அரசியல்வியாதிகளோ சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழி திட்டத்திலே சேர்ந்துகொண்டால் காஷ்மீருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என பேசி வந்தார்கள் எனவே சீனா நம்பிக்கையாக இருந்தது லடாக் சீனாவுக்குத்தான் என.

அதுக்கு ஆப்பு 370 வழியாக வந்தது. சீனா இதை எதிர்பார்க்கவில்லை.

இப்போது மோடி அரசு அந்த 370 ஐ திரும்பவும் கொண்டு வந்தால் ஒழிய லடாக்கிலே பிரச்சினையை தீர்க்கமாட்டோம் என சொல்லியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலே இன்னோர் தகவலும் உண்டு, நமது ராணுவம் நேற்றைய தினங்களிலே குண்டு வீசித்தாக்கியதிலே பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுக்கு போகும் பாதை துண்டிப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்திருக்கிறது.

எனவே இந்த துண்டிப்பு சீனாவுக்கு பெரும் சிக்கல். மலாய்க்கா ஸ்ரெயிட்ஸ் எனப்படும் சிங்கப்பூர் வழியாக போகும் நீர்ப்போக்குவரத்து முடக்கப்பட்டால் சீனாவின் மொத்த ஏற்றுமதிக்கும் ஆபத்து. எனவே தான் இந்தப்பக்கம் ஒரு தரைவழி இணைப்பு தொடங்கியது.

அதிலே சேரும்படி நம்மை மிரட்டி பார்த்தது.370 ஐ நீக்கியதற்குபின்பு ஐநா சபைவரை போவோம் என மிரட்டி பார்த்தது.

மோடியோ எதற்கும் மசியவில்லை கண்டுகொள்ளவில்லை.

கடைசி முயற்சியாக இதிலெ இறங்கியிருக்கிறது.

அப்படியானால் நம்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதா? இல்லை. எப்படி?

பாக்கிஸ்தான் எல்லை போல சீனாவுடனான எல்லை வரையறுக்கப் படவில்லை. அங்கே நடுவிலே இருக்கும் பகுதியை இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடு கின்றன.

நடுவிலே இருக்கும்பகுதிக்கு யார் போனாலும் பிரச்சினை தான். ஆனால் முடிவு எட்டப்படும் வரை யாருக்கும் சொந்தமில்லை என பேசிக்கொண்டிருக்கிறோம்.

சரி இப்போது என்ன பிரச்சினை?

காவான் பள்ளத்தாக்கு எனும் பள்ளத்தாக்கிலே சீனப்படைகள் நுழைய முயன்று தடுக்கப்பட்டன. ஆனால் நமது ராணுவம் அதை ஆக்கிரமித்து உள்ளது என சீனா சொல்கிறது.

இதனால் போர்வருமா?

சீனாவுக்கு போரை துவக்குதிலே எல்லாம் விருப்பமில்லை. வெல்ல முடியாது என தெரியும். ஆனால் இப்படி மாதமொருமுறை பிரச்சின செய்துகொண்டே இருக்கும்.

தீர்வு தான் என்ன?

சீனா தன்னுடைய ஆதிக்க குணத்தை கைவிடும் வரை தீர்வு எட்டப்பட முடியாது. முன்பை விட இப்போது நமது வளர்ச்சியை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கிறது. பாக்கிகளை வைத்து தொல்லை கொடுக்கலாம் என்றிருந்ததற்கு மோடி முடிவு கட்டிவிட்டார் என்பதால் இப்போது நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

மோடி இதற்கும் ஒரு முடிவு காண்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...