இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது

இந்தியா – சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணியவும், எல்லையில் படைகளை குறைக்கவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர், கடந்த செப்டம்பர் மாத கடைசியில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கின் கிழக்கு பகுதி எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, லடாக்கின் கிழக்கு பகுதி எல்லையில், ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு குறித்து, இது வரை தகவல் இல்லை.

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”இந்த ஒப்பந்தம் மூலம், 2020 மே மாதத்துக்கு முன் எந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து சென்றார்களோ, அதே நிலை இப்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்புக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது, எல்லையில் அமைதி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...