மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள தினஜ் பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேபேந்திர நாத் ராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஹேமதா பாத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ. ஆனார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகியவர், கடந்த ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.
இந்நிலையில், இன்று காலை தேபேந்திர நாத்தின் உடல் அவரது வீட்டின்முன்பு தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். தேபேந்திர நாத் ராய் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்தது குற்றமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
சந்தேகத்திற்கிடமாக தேபேந்திர நாத் ராய் கொல்லப்பட்டுள்ளது மம்தா பானர்ஜி அரசு சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்து விட்டதை காட்டுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |