புதிய கல்விக் கொள்கை

படிப்பில் ஆர்வம் கொண்டோருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிடும் நோக்குடன் , புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக்கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள கல்விக்கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சிலதிருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போதே, ‘புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்’ என, பா.ஜ.க, தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான முயற்சிகளை, அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரகாஷ் ஜாவடேகர் அதை வேகப்படுத்தினார்.

இதற்காக, ‘இஸ்ரோ’   அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரி ரங்கன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது., கடந்தாண்டில், இந்தக்குழு, தன் வரைவு அறிக்கையை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது.

மேலும், அந்த அறிக்கை, பொதுமக்களின் கருத்துக்காக, இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த  கல்வி கொள்கை தொடர்பாக, லட்சக்கணக்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன. பலமாநிலங்கள், எம்.பி.,க்கள் குழு என, பல்வேறு தரப்புடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை இறுதி செய்ய பட்டது.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், புதிய கல்விக்கொள்கை குறித்தும், அமைச்சர்கள், பிரகாஷ் ஜாவடேகர், ரமேஷ் பொக்ரியால் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

”புதிய உலகின் சவால்களை மாணவர்கள் எதிர்கொள்ள, புதிய கல்விக் கொள்கை அவசியமாகிறது.புதியஇந்தியாவை உருவாக்கும் வகையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவிரிவான விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இது வடிவமைக்க பட்டுள்ளது,” என, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ”இந்தப் புதிய கல்விக்கொள்கை, நம் இந்தியாவை, அறிவுசார் சமூகமாக மாற்றும்,” என, ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்கு செலவிடப்படும் என்ற அறிவிப்பு, கல்விக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கடந்த, 1960களில் இருந்து இந்தக் கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி, கல்வித்துறையாக அழைக்கப்படும் என்று, அமைச்சகத்தின் பெயரில் இருந்து சீர்திருத்தங்கள் துவங்கியுள்ளன.

புதிய கல்விக்கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* தற்போது, ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் கட்டாயகல்வி உரிமை, 1 – 8ம் வரை உள்ளது. அது, பிரீ கே.ஜி., முதல், 12ம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.

* தற்போதுள்ள, 10 + 2 முறை மாற்றப்படுகிறது. இனி 5 + 3 + 3 + 4 என்ற முறை அமல்படுத்தப்படும்

* புதிய திட்டத்தின்படி, மாணவ – மாணவியர், 3 – 8 வயதுவரை, அடித்தள நிலை என, முதல், ஐந்து ஆண்டுகள் படிப்பர். பிறகு, 8 – 11 வயதுவரை, தயார்படுத்தும் நிலை என, மூன்று ஆண்டுகள் படிப்பர். அதன் பிறகு, 11 – 14 வயதுவரை, நடுநிலை பள்ளியில் படிப்பர். அதைத் தொடர்ந்து, 14 – 18 வயது வரை, உயர் நிலைப்பள்ளி படிப்பர். அதாவது, 8ம் வகுப்பில் இருந்து, 12ம் வரை, உயர்நிலை பள்ளிகல்வி இருக்கும்

* பாடப் பிரிவுகளில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அறிவியல் முதல் அனைத்தையும் படிக்கலாம். அதுபோல், துணைப்பாடங்கள், கூடுதல் பாடங்கள் போன்றவை கிடையாது. கலை, இசை, கைவினை பொருட்கள், விளையாட்டு, யோகா, சமூகசேவை போன்றவை, பாட திட்டத்திலேயே சேர்க்கப்படும்

* மத்திய, மாநில கல்விவாரியத் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் திறன்கள், பாடத்தில் உள்ள அவர்களுக்கு உள்ள அறிவு, புரிந்துகொள்ளும் தன்மையே பரிசோதிக்கப்படும்

* தொழிற்கல்வி என்பது வழக்கமான பள்ளிக் கல்வியுடன் சேர்க்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து, ஒருங்கிணைந்த, தொழில்கல்வி முறையே இருக்கும்

* மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான வாரியத்தேர்வுகள் இருக்கும். ஆனால், தற்போதிருக்கும், மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை, நெருக்கடியை தரும் வகையில் இருக்காது

* மும்மொழி திட்டத்தில், ஒருபாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துக் கொள்ள முக்கியத்துவம் தரப்படும்.

உயர்கல்வி எனப்படும், பட்டப் படிப்பு முறையிலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில், விரும்பிபடிக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்காக, ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ எனப்படும், தேசியதிறன் சோதனை அமைப்பு உருவாக்கப்படும்

* இளநிலை பட்டப் படிப்பு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இதில், எந்தநேரத்திலும், மாணவர்கள் வெளியேறலாம்

* முதல் ஆண்டில் வெளியேறினால், சான்றிதழ் அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் வெளியேறுவோருக்கு, பட்டயம்தரப்படும். மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு, பட்டம்வழங்கப்படும். இதற்கு மேலும், உயர் கல்வி படிக்க விரும்புவோர், நான்காம் ஆண்டுபடிப்பை தொடரலாம்

* இதன் மூலம், மாணவர்கள், தங்களுடைய விருப்பதற்கேற்ப முடிவுசெய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பம், பொருளாதாரம், உடல்நலப் பிரச்னைகளால் படிப்பை தொடர முடியா விட்டாலும், அவர்களுக்கு, சான்றிதழ், பட்டயம், பட்டம், இவற்றில் ஏதாவது ஒன்றுகிடைக்கும்

* புதிய கல்வி கொள்கையின் படி, இணைப்பு கல்லுாரிகள் என்றமுறை, அடுத்த, 15 ஆண்டுகளுக்குள் முழுதுமாக நீக்கப்படும்

* வெளிநாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள், இந்தியாவில் கல்லூரிகள்துவங்க அனுமதி வழங்கப்படும்

* எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு கைவிடப்படுகிறது

* சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளைத் தவிர்த்து, மற்ற உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த, ஒரே கண் காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும்

* அரசு மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களுக்கு, பொதுவான நடைமுறை கொள்கை வகுக்கப்படும்

* கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்படும்

* சமஸ்கிருதம் உள்பட பல்வேறு இந்திய மொழிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க மையம் உருவாக்கப்படும்

* சமஸ்கிருத பல்கலைகள், பல்வழிகல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...