புதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதில் இருந்து கற்கும்நிலைக்கு உயர்த்தும்

இத்தகைய சூழலில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அக்கொள்கையை செயல் படுத்துவது குறித்தே பெரும்பாலானோா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் உரிய மதிப்பளிக்கப்படுகிறது. அவா்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.

கல்விக் கொள்கை குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதில் மாநில ஆளுநா்களுக்கும் முக்கியப்பங்குண்டு. மிகவும் திறந்த மனதுடன், இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்தவேண்டும் என்பதே, அரசின் நோக்கமாகும்.ராணுவக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்றவை, அரசின் கொள்கையல்ல; அது, நாட்டின் கொள்கை. அதுபோலவே, இந்தக்கல்விக் கொள்கையும், நம் நாட்டின் கொள்கையாகும். நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப, இந்தக்கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது, அனைவருக் கான கொள்கையாகும்.

கல்விக் கொள்கையை வடிவமைப்பது மற்றும் செயல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சிகளின் பங்குள்ளது. அதேநேரத்தில், இந்தக் கொள்கையில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது. இதில் தொடர்புடைய, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரின் பங்கே அதிகம் இருக்க வேண்டும்.

மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வளைந்துகொடுக்கும் வகையில் இந்தக் கொள்கை அமைந்துள்ளது. அதுபோல், இந்தக்கொள்கையை செயல்படுத்துவதிலும், வளைந்து கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும். அனைத்து தரப்பினரும், மாணவர்களின், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த கல்வி கொள்கைக்கு, நாட்டின் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். கிராமத்தில் உள்ள ஆசிரியர்களில் இருந்து, கல்வியாளர்கள் வரை பலரும் இதைவரவேற்று, கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த கல்விக் கொள்கையானது, மாணவர்களை படிப்பதில் இருந்து கற்கும்நிலைக்கு உயர்த்தும். மேலும், பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

 

கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் இடையே வளா்ச்சியை முன்னிறுத்திய போட்டி மனப்பான்மையை வளா்க்கும் நோக்கிலேயே பல்வேறு படிநிலைகளில் தன்னாட்சிஅதிகாரம் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புத்தகச்சுமை, தோ்வுபயம் உள்ளிட்டவற்றிலிருந்து மாணவா்களை விடுவித்து செய்முறை அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இந்திய இளைஞா்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மதிப்புமிக்க பணியாளா்களாக மாற்றுவதில் தேசிய கல்விக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கும்.

‘சுயசாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கு நாட்டை உந்திச் செலுத்துவதற்கான வலிமையை தேசியகல்விக் கொள்கை வழங்கும். முன்பெல்லாம் ஏதோவொரு படிப்பைத் தோ்வு செய்வதை மாணவா்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனா். அந்தப்பாடங்களில் தங்களுக்கு விருப்பமில்லை என்பதையும் பெரும்பாலான மாணவா்கள் தாமதமாகவே அறிந்து கொண்டனா்.

அத்தகைய குறைபாடுகள் தேசியகல்விக் கொள்கையில் களையப்பட்டுள்ளன. புதிய கொள்கையில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடம் எது என்பதை உரிய பருவத்தில் அறிந்துகொள்ள முடியும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பள்ளிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த மாநாட்டில் மாநில கல்வி அமைச்சா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

‘உயா்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக்கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில ஆளுநா்களுக்கான மாநாடு காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநில ஆளுநா்களும் கலந்து கொண்டனா். மாநாட்டில் பிரதமா் மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...