நீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப்படும் கொலைகளே

மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான தகுதித் தேர்வான நீட் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது இந்த கொரோன பேரிடர் காலத்தில், மாணவர்களின் போக்குவரத்து, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை கடந்து நடந்துள்ளது இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர் 3200 தேர்வு மையங்கள் மற்றும் ஒரு அறைக்கான மாணவர்கள் எண்ணிக்கை 25 இருந்து 12 என குறைப்பு என்று பல சவால்களை சந்தித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் சில மாணவர்களின் தற்கொலைக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது. இதற்குக் காரணம் மாணவர்களின் தன்னம்பிக்கையோ இயலாமையோ அல்ல. திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் பிண அரசியலே!.. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் தன்னம்பிக்கையை, படிக்கும் மனோவலிமையை ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு விதத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றன. இந்த வருடம் வராது அடுத்த வருடம் தடுத்து நிறுத்திவிடுவோம் எனும் அறிக்கைகள், மிகவும் கடினமானது என்று உருவாக்கப்படும் தோற்றங்கள் எல்லாம், ஒரு சில நன்கு படிக்கும் மாணவர்களின் ஆர்வத்தை குலைக்கத்தான் செயகிறது. எனவே இது தற்கொலைகள் அல்ல, எதிர்க்கட்சிகளின் மோசமான செயல்பாடுகளால் செய்யப்பட கொலைகள் என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் நாட்டின் எந்த பகுதியிலும் தற்கொலைகளை காண முடிய வில்லை. தேசிய நீரோட்டத்தில் முழுமையாக சமீபத்தில் இணைந்த ஜம்மு காஷ்மீரில் இல்லை, கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என்று எங்கும் இல்லை தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அவலம் ?. தமிழக மாணவர்கள் என்ன மனோ வலிமையில் குறைந்தவர்களா?, கல்வியறிவில் பின் தங்கியவர்களா?. போட்டித் தேர்வையே எதிர்கொள்ளாதவர்களா?,

மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பூர்ண சுந்தரி ஐஏஎஸ் தேர்வில்வெற்றிபெற வில்லையா?. சமீபத்தில் நிலச்சரிவில் தனது குடும்ப த்தையே மொத்தமாக பறிக்கொடுத்த ஹேமலதா நீட்டை தைரியமாக எதிர்கொள்ள வில்லையா?. ஏன் எதிர்க்கட்சிகள் இவர்களை எல்லாம் கொண்டாடுவது இல்லை. தன்னம்பிக்கைகளை விதைப்பது இல்லை. .

ஏனென்றால் எதிர் கட்சிகளின் நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே சுய நலனின், சுய லாபத்தின் வெளிப்பாடே.. அவர்களின் இந்த போராட்டங்கள் முதலில் மாணவர்களுக்காக அல்ல. கோடி கோடியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொட்டிக்கொடுக்கும் கமிஷன்களுக்காக. சில அரசியல் காட்சிகளே பினாமி பெயரில் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் வசூலை வாரி குவிப்பதற்க்காக. நீட் தேர்வு இருப்பதனால்தான் தகுதி என்பது அடிப்படையாகியுள்ளது. மதிப்பெண் எடுத்தால் தான் மருத்துவம் என்ற நிலை வந்துவிட்டது. பார்டரில் பாஸ் ஆவோரெல்லாம் கோடிகளை கொட்டிக் கொடுத்து மருத்துவர் ஆகலாம் என்ற நம்பிக்கைக்கு உலை வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் எண்ணி மாணவர்கள் கொண்டாட வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...