வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார். இந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திருப்பு முனை என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் ட்விட்டரில் பதிவுகள் கூறியுள்ளதாவது . “இந்திய வேளாண் துறையின் வரலாற்றில் திருப்புமுனை தருணம்! முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறித்து, கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குப் பாராட்டுகள். இந்தமசோதாக்கள் நிறைவேறியதால் வேளாண்மைத் துறையில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுவது உறுதி செய்யப்படுவதுடன், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யப்படும்
பல தசாப்த காலங்களாக இந்தியவிவசாயிகள் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியிருந்தது, இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மூலம் இதுபோன்ற எதிர்மறை சூழல்களில் இருந்து விவசாயிகள் விடுதலைபெறுவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளுக்கு இந்த மசோதாக்கள் புதிய உந்துதலை கொடுக்கும். அவர்களுக்கு அதிகவளமை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு உதவியாக நவீனதொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இப்போது இந்தமசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதன் மூலம், உற்பத்தியை பெருக்கும் மற்றும் நல்ல விளைச்சலைத்தரும் வகையிலான எதிர்கால தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் எளிதில் கிடைக்கும். இது வரவேற்புக்குரிய ஒரு படிநிலை.
நான் இதை முன்பு கூறியிருக்கிறேன், மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்:
குறைந்தபட்ச ஆதரவுவிலை நடைமுறை தொடரும். அரசு கொள்முதல் தொடரும். நம் விவசாயிகளுக்கு சேவைசெய்யவே நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவான எல்லாவற்றையும் நாங்கள்செய்வோம். வரக்கூடிய தலைமுறைகளில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்தையும் செய்வோம்”
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |