ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா

காஷ்மீர், :ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்துதெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என, ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது  அரசியல்சாசன சட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கியமுடிவை, மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நிலைநிறுத்தவும், ஜம்மு – காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணைநிற்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை சார்ந்த பிரதான எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு போரை முன்னெடுத்து இருப்பது நல்ல முன்னேற்றம்‘ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவுத்தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறுகின்ற ப.சிதம்பரத்துக்கு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் நக்சலைட்டுகளுடன் தொடர்புஇருக்கலாம்.  இதேபோல், திக்விஜய் சிங்கும் பேசியுள்ளார். இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு அனுமதித்ததற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...