ஜம்மு காஷ்மீரில் பிரதமர் அடித்தள ஜனநாயகத்தை நிலைநாட்டினார்

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தி, அந்தப் பிராந்தியத்தில்அடித்தள  ஜனநாயகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடிஅறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தூர்தர்ஷன் செய்திப் பிரிவுக்கு சிறப்புப் பேட்டி அளித்தமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர்அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும்ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர்ஜிதேந்திர சிங், 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்கள் இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளூர் சுயாட்சியைக் கொண்டு வந்தாலும், உண்மையான உள்ளூர் சுயாட்சி எப்போதும்ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்ததில்லை. 370 மற்றும் 35 ஏ பிரிவுகளால் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்றபோர்வையில் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குஇந்த உரிமைகள் மறுக்கப்பட்டன என்றார்..

370-வது பிரிவை ரத்து செய்வது  குறித்து தவறான கதையை உருவாக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை அவர் உறுதியாக நிராகரித்தார். இந்த முயற்சிகள்வெற்று சொல்லாடல்கள். அவை இனி ஜம்மு காஷ்மீர் மக்களிடம்  எடுபடாது. முந்தையஇரண்டு தலைமுறைகளின் அவல நிலையைக் கண்ட புதிய தலைமுறை வாக்காளர்களுக்கு இது  பொருந்தாது, “என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

“370 வது பிரிவை ரத்து செய்த பின்னர் ஜம்மு காஷ்மீரின் இளைஞர்கள் ஜனநாயகத்தின் புதிய அலையைக் காண்கிறார்கள்”என்று கூறிய  டாக்டர் ஜிதேந்திர சிங்,  ஜம்மு காஷ்மீரில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின் வெற்றியில்அவர் நம்பிக்கைதெரிவித்தார். மக்களிடையே வலுவான உற்சாகத்தின் அலை இருப்பதாக்க அவர் குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல்கள் உட்பட சமீபத்திய தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவால்நிரூபிக்கப்பட்டபடி, பிராந்தியத்தின்துடிப்பான ஜனநாயகம் 370-வது பிரிவு ரத்துசெய்யப்பட்ட பின்மீண்டும் மலரத் தயாராக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

“ஜம்முகாஷ்மீரை முழுமையாக இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைக்கும் முடிக்கப்படாத பணியை பிரதமர் மோடி முடித்தார். 370 வது பிரிவை ரத்து செய்தது, ஏழுதசாப்தங்களாக அவற்றை இழந்தவர்களுக்கு குடியுரிமையைக்கொண்டு வந்துள்ளது. மேலும் இந்தியாவின்வளர்ச்சிக் கதையின் ஜோதியாக ஜம்மு காஷ்மீர் வெளிப்படுவதற்கு களம் அமைத்துள்ளது” என்று அவர் கூறினார்.

“வரவிருக்கும் ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் முழு இந்தியாவிற்கும்மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக வெளிப்படும்” என்று நேர்காணலின் முடிவில் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 370 வது பிரிவை ரத்து செய்வது ஜம்மு-காஷ்மீரில் ஒருபுதியசகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளது, அங்கு மக்களின் குரல்கள் கேட்கப்படுகின்றன மற்றும்அவர்களின் உரிமைகள்முழுமையாக உணரப்படுகின்றன என்று அவர்கூறினார். பிரதமர்நரேந்திர மோடியின்தொலைநோக்கு தலைமையின் கீழ்இந்தியாவின் வளர்ச்சிக்கதையை வழிநடத்தும்நிலையை ஜம்மு-காஷ்மீர் விரைவில் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்- அமித்ஷா உறுதி 'வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முத ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ச ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடி -அமித்ஷா பெருமிதம் '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதம ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகம ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து  'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என ...

பிரதமர் மோடியின் நவராத்திரி வி ...

பிரதமர் மோடியின் நவராத்திரி விரதம் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.