நவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி

நான்காம் நாளில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலை போலவே நீலநிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டுகரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாக கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப்பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டியசெல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண் குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபட வேண்டும். அந்த வகையில் ஐந்து வயதுபெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒருகுழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும். ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்றுபொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய்நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காவது நாள் காலையில் முழு அரிசியைக்கொண்டு படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். பிறகு லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி வழிபாட்டு பாடல்களைப்பாடி விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியை வழிபடவேண்டும்.

மாலையில் வைஷ்ணவி தேவிக்கு கதம்பசாதமும், ஏதேனும் ஒரு சுண்டலும் செய்து நைவேத்தியம் செய்து, வீட்டுக்குவரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

இன்றைய தினத்துக்கான குமாரியின் பெயர் -ரோஹிணி; மந்த்ரம் – ஓம் ரோஹிண்யை நம: சுவாசிநியின் பெயர் கூஷ்மாண்டா; மந்த்ரம் – ஓம் கூஷ்மாண்டாயை நம:

இன்று அம்பிகைக்கு கதிர்பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவள் அன்னைசக்திதான் என்பதால், நவராத்திரி நாள்களில் சக்தியின் ஆதர்சவடிவமாக விளங்கும் பெண்குழந்தைகளை நாம் பூஜிக்கிறோம். இதன்காரணமாக நம்மில் சிறியவரையும் மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்படுவதுடன், பூஜிக்கப் படும் குழந்தைகளின் மனதிலும் நல்லமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிவபெருமானும், ராமபிரானும் கூட நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் குறித்துப்பார்ப்போம்…

தேவி பாகவதத்தில் மகரிஷிவியாசர் ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம்பற்றி விளக்கி உள்ளார்.

சீதையை ராவணன் கடத்திச்சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது திரிலோக சஞ்சாரியான நாரதர் அங்கேவந்தார்.

அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீ ராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தை கண்ட நாரதர் பேசத்தொடங்கினார்…

”ரகுகுல திலகா! நீ வருத்தத்துடன் இருப்பதற்கான காரணத்தை நான் அறிவேன். திரிலோக சஞ்சாரியாக நான் சஞ்சரிக்கும்வழியில் சொர்க்கத்துக்கும் சென்று வந்தேன். அங்கே எனக்கு சிலஉண்மைகள் தெரியவந்தன. அந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்” என்று கூறியவர் தொடர்ந்து

”மகாலட்சுமியின் அம்சமான சீதை முற்பிறவியில் ஒருமுனிவரின் மகளாக வேதவதி என்ற பெயரில் தோன்றியவள். தவத்தில் இருந்தவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன், அவளை அடைய ஆசைகொண்டு அவளுடைய கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தான். கோபம் கொண்ட வேதவதி, ‘நாராயணனை மணக்க தவம் புரியும் என்னைக் கண்டு மோகித்து, என் கையையும் பிடிக்கத்துணிந்த உன்னை நான் கொல்வதற்காக மறுபடியும் கர்ப்பவாசம் இல்லாமல் பூமியில் தோன்றுவேன்’ என்று சாபம் கொடுத்துவிட்டு, அக்னியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள். அவள்தான் சீதையாக அவதரித்து இருக்கிறாள். தான் அழிவதற்காகவே ராவணன் சீதையை கடத்திச் சென்றிருக்கிறான். மகாவிஷ்ணுவின் அவதாரமான நீயும் ரகுவம்சத்தில் தோன்றி இருக்கிறாய். உன்னால் ராவணன் அழியப்போவது உறுதி என்றுநினைத்து தேவலோகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்” என்று கூறியவர்,ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான வழியையும் விளக்கினார்.


”ராமச்சந்திரா! ராவணனை அழிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நீ புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் விரதம் இருந்து, அம்பிகையை பூஜை செய்தால், அம்பிகை உனக்கு அளவற்ற சித்திகளைத் தருவாள். இந்திரனும், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்திருக்கின்றனர். எனவே நீயும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பாய்” என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் பற்றியும் கூறினார்.

நாரதர் கூறியபடியே நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராமர் பிரதமை முதல் விரதம் இருந்து பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம் செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...