நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இரு ஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்புச் சூழல் கடந்த இருஆண்டுகளில் நல்ல முறையில் மேம்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன்கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் கட்டப்பட இருக்கும் வெங்கடாசலபதி கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பிறகு அமைச்சா் கிஷண்ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதுடன், பாதுகாப்புச் சூழல் நன்றாக மேம்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் கடலோரபாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டதுடன், ஊடுருவல் முயற்சிகள், கிளா்ச்சி நடவடிக்கைகள், இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம் என எந்தவொரு நிகழ்வும் ஏற்படவில்லை. எல்லைப்பகுதி தவிா்த்து பயங்கரவாத நடவடிக்கைகள் எங்கும் இல்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, நாட்டில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் எங்கும் நிகழவில்லை.

ஜம்முகாஷ்மீா் மற்றும் லடாக் வளா்ச்சிக்கென மத்திய அரசு பல்வேறு திட்டங்களை யோசித்திருந்தது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அதில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் கருத்தை அறியவும், வளா்ச்சிக்கான அவா்களது தேவையை தெரிந்துகொள்ளவும் பிரதமா் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் 36 மத்திய அமைச்சா்கள் யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொருபகுதிக்கும் சென்றுள்ளோம்.

கடவுளின் ஆசீா்வாதத்தால் கரோனா போரில் நாம்வென்று, ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மக்களின் தேவையை அறிந்து அதை செயல்படுத்துவதில் மீண்டும் கூடுதல்கவனம் செலுத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் கட்டப்படும் வெங்கடாசலபதி கோயில், மதரீதியிலான சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். வைஷ்ணவி தேவி கோயிலுக்காக வருவோா், இனி வெங்கடாசலபதி கோயிலையும் தரிசிப்பா். இதனால் பிரதேசமக்கங்களுக்கு பொருளாதார ரீதியிலான பலன்கள் கிடைக்கும் என்று கிஷண்ரெட்டி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சாா்பில் வெங்கடாசலபதி கோயிலும், அதுசாா்ந்த இதர கட்டுமானங்களும் மேற்கொள்வதற்காக 62.02 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...