பா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.,நட்டா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:தமிழத்தில் வரும் 2021ம் ஆண்டில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் பா.ஜ., குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு கட்சியின் மகளிரணி தேசிய தலைவராக நியமிக்க பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வானதிசீனிவாசன் தற்போது தமிழக பா.ஜ.,வின் துணை தலைவராக இருந்து வருகிறார். வக்கீலான இவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளர் என்பது குறிப்பிட தக்கது
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |