`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்!

தமிழகத்தில் பாஜக சார்பில், `நவம்பர் 6-ம்தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல்யாத்திரை நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரையை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்க பாஜக தமிழக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், பாஜக-வின் வேல்யாத்திரைக்குத் தடைவிதிக்க தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும் என செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, “கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை ஏற்படும் என்று எச்சரிக்கப் பட்டிருக்கும் நிலையில், வேல்யாத்திரை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஜி.பி தரப்பில் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுநிகழ்ச்சிகளில் 100 பேருக்குமேல் கூடக் கூடாது என தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நவம்பர் 16-ம் தேதிவரை இருக்கும் நிலையில், அதற்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜ.க தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத்திறக்க அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், வேல் யாத்திரையைத் தடை செய்வதுசரியல்ல. கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்தப் பகுதியிலும் தங்கப்போவதில்லை. அதேபோல், குறிப்பிட்ட எந்தப்பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. மேலும், தனிமனித விலகலையே மத்திய அரசு வலியுறுத்தி வருவதாகவும் வாதம் முன்வைக்கப் பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்தநிலையில் பா.ஜ.க தரப்பில், `திருத்தணியில் இன்றுகாலை வேல் யாத்திரை தொடங்கும்’ என்ற தகவல் வெளியானது. இதனால் தடையை மீறி பா.ஜ.க வேல் யாத்திரையை மேற்கொள்ளபோவதாகப் பரபரப்பு ஏற்பட்டது. “வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் வேல் யாத்திரையை பாஜக தொடங்கவிருக்கிறது” என சென்னையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்தார்

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன்” என சென்னையில் தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் விழுப்பரம்உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி வேல்யாத்திரை செல்லக்கூடும் என்பதால் இந்தக் கைது நடவடிக்கை எனச் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் கோயம்பேடு பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி, தன்னுடைய ஆதரவாளர்களுடன், கையில்வேலுடன் தடையை மீறி யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன். `முருகனின் துணைகொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்குகிறோம்’ என பா.ஜ.க-வினர் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...