வீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்பெறும் வகையில் மூன்றாம் கட்ட ஊக்குவிப்பு திட்டங்கள்

கொரோனா ஊரடங்கால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும்வகையில், மூன்றாம் கட்ட ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, வீடுகள் வாங்குவோரும். விற்போரும் பயன்பெறும் வகையில், வரிச்சலுகை அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:நாட்டில் கொரோனாபரவல் குறையத் துவங்கிஉள்ளது. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. கொரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட, நீண்டகால, கடுமையான ஊரடங்குக்குப்பின், மத்திய அரசு பலதளர்வுகளை அறிவித்தது. மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை அடைந்துவருகிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள், தெளிவாக தென்படுகின்றன. பங்குச்சந்தைகள் புதியஉச்சத்தை தொட்டுள்ளன. கடந்த ஏப்., முதல், ஆக., வரை அன்னிய நேரடி முதலீடு, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்., மாதத்திற்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தொகை, 1 லட்சம்கோடி ரூபாயை கடந்துள்ளது. எரிசக்தி நுகர்வு வளர்ச்சி, அக்டோபரில், 12 சதவீதமாக உயர்ந்தது. சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளின் எடை அளவு, 12 சதவீதத்திலிருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறித்து, ரிசர்வ் வங்கி, கணிப்பு ஒன்றைத் தெரிவித்துள்ளது.

அதில், 2020 — 21ம் நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில், பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்குத் திரும்பும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், 68.6 கோடிபேர் பயன் பெற்றுள்ளனர். வங்கியில் கடன் வழங்கும் அளவும், 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தனி இணையதளம் துவக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1.5 கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான் கிரெடிட்கார்டு’ வழங்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக, 3,621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வருமானவரி, ‘ரீபண்டாக’, 1.32 லட்சம் கோடி ரூபாய், 39.7 லட்சம்பேருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில மின்நிறுவனங்களுக்கு, 1.18 லட்சம் கோடி தரப்பட்டுள்ளது.
‘பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம், கடந்த ஆண்டு, மார்ச், 31 வரை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது. இந்ததிட்டம், மூன்று ஆண்டுகள் வரை அமலில் இருக்கும்’ என, எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, 2.65 லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான, மூன்றாம் கட்ட ஊக்குவிப்பு திட்டங்கள், இன்று அறிவிக்கப்படுகின்றன. புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், தற்சார்பு இந்திய வேலைவாய்ப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வைப்புநிதி திட்டத்தில் மானிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தவர்களும், மார்ச், 1 முதல், செப்., 30 வரை, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம்வாங்கி வேலை இழந்தவர்களும், அக்., 1க்கு பின் வேலையில் சேர்ந்தவர்களும், இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இதன்படி, பி.எப்., திட்டத்தில், பணியாளர்கள் பங்களிப்பாக, 12 சதவீதம், நிறுவனம் பங்களிப்பாக, 12 சதவீதம் என மொத்தம், 24 சதவீத தொகை,
நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டு ஜூன், 30-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டம், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தத்திட்டம், மார்ச், 31- வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு, பிணையில்லாக் கடன் வழங்கப்படும்.கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக, உயிரி தொழில்நுட்பத்துறைக்கு, 900 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.விவசாயிகளுக்கு குறைந்தவிலையில் உரம் கிடைக்க, 65 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். வீடுகள் வாங்குவோருக்கும், விற்பவருக்கும் பயனளிக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட உள்ளது. இதன்படி, 2 கோடி ரூபாய் வரை வரிச் சலுகை அளிக்கப்படும். இதுவரை, அரசு விலைக்கும், ஒப்பந்தத்தில் உள்ள விலைக்கும், 10 சதவீத வேறுபாடுமட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு, ஜூன், 30 வரை, இந்த வேறுபாடு, 20 சதவீதம் வரை அனுமதிக்கப்படும். இதனால், வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஊரக பகுதியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடுதலாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இதைத்தவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்துறை ஊக்கத்தொகை, உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கான மூலதனம் மற்றும் தொழில்துறை செலவினங்கள் போன்றவற்றுக்காக, 10 ஆயிரத்து, 200 கோடிரூபாய், கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கூறினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசு, இதுவரை, 30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை அறிவித்துள்ளது.

சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அந்தப் பொருட்களை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை, அதிகநாட்கள் கெடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வை தடுக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால்தான், பண்டிகை காலத்தில், பருப்பு போன்ற பொருட்களின் விலை பெருமளவில் உயரவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.