தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்

அதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் பெருந்தொற்று காலத்திலும், பிரிக்ஸ் தனது உத்வேகத்தை பராமரிக்க முடிந்துள்ளது. நான் என்னுடைய உரையை தொடங்கும்முன்பாக, அதிபர் ராமபோசாவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்களே, இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருப்பொருள்- ‘’உலக ஸ்திரத்தன்மைக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையானவளர்ச்சி’’, பொருத்தமானது மட்டுமல்லாமல், தொலைநோக்கு கொண்டது. குறிப்பிடத்தக்க புவி-மூலோபாய மாற்றங்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. அவை, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. இந்த மூன்று அம்சங்களிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு, இரண்டாவது உலகப் போரின் 75-வது ஆண்டாகும். நாம் இழந்த தீரமிக்க வீரர்கள் அனைவருக்கும், நாம் மரியாதைசெலுத்துகிறோம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகியபகுதிகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான துணிச்சல் மிக்க இந்திய வீரர்கள் அந்தப் போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டை, ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ஆண்டாக நாம்நினைவு கூருகிறோம். ஐ.நா அமைப்பை நிறுவிய உறுப்பு நாடாக இந்தியா, பன்முகத்தன்மைக்கு வலுவான ஆதரவை எப்போதும் அளித்துவருகிறது. இந்திய கலாச்சாரம், உலகம் முழுவதையும் ஒருகுடும்பமாக பாவித்து வருகிறது. எனவே, நாங்கள் ஐ.நா போன்ற அமைப்பை ஆதரிப்பது இயல்பானதாகும். ஐ.நா மரபுகள் மீதான எங்களது அர்ப்பணிப்பு தடைபடாததாக உள்ளது. ஐ.நா அமைதிகாக்கும் படை நடவடிக்கைகளில் இந்தியா அதிகமான வீரர்களை இழந்துள்ளது. ஆனால், இன்று அந்த பன்முகத் தன்மை கொண்ட அமைப்பு முறை சிக்கல்களை சந்தித்து வருகிறது.

உலக நிர்வாக அமைப்புகளின் நம்பகத்தன்மையும், செயல்திறனும் கேள்விக்குறியாகி உள்ளது. இவை காலத்திற்கு ஏற்பமாறாததே இதற்கு முக்கிய காரணமாகும். 75 ஆண்டுகளுக்கு முன்பு கண்டது போன்ற சிந்தனையும், எதார்த்தமும் இன்னும் வேரோடி உள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் அவசியம் என இந்தியாநம்புகிறது. இந்த விஷயத்தில் நமது பிரிக்ஸ் கூட்டு நாடுகளின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஐ.நா தவிர, பலசர்வதேச நிறுவனங்களும் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்றபடி செயல்படவில்லை. உலகவர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியற்றிலும் சீர்திருத்தம் அவசியமாகும்.

“உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளையும் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்”. ரஷ்யாவின் தலைமையின்கீழ், பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு உத்தி இறுதியாக்க பட்டுள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதை இந்தியா தனது தலைமையின்கீழ் மேலும் முன்னெடுத்து செல்லும்.

தலைவர்களே, கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதாரமீட்பு நடவடிக்கையில், பிரிக்ஸ் பொருளாதாரங்கள் முக்கியபங்கு வகிக்கும். உலகின் மக்கள் தொகையில் 42%_க்கும் அதிகமான விகிதத்தை கொண்டுள்ளோம். உலக பொருளாதாரத்தின் முன் எந்திரமாக நமதுநாடுகள் திகழ்கின்றன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க அதிகவாய்ப்பு உள்ளது. உலகபு் பொருளாதார மீட்பு நடவடிக்கையில், பிரிக்ஸ் இன்டர்பேங்க் மெக்கானிசம், புதிய வளர்ச்சி வங்கி, சில்லரை செலவின இருப்பு மற்றும் சுங்கஒத்துழைப்பு போன்ற நமது பரஸ்பர நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் செயல்திறன் மிக்க பங்களிப்பை அளிக்கமுடியும். இந்தியாவில், தன்னிறைவு இந்தியா இயக்கத்தின் கீழ், நாங்கள் விரிவான சீர்திருத்த நடைமுறையைத் தொடங்கியுள்ளோம். தன்னிறைவு பெற்ற இந்தியாவால், கோவிட் தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை பன் மடங்காக்க முடியும் என்பதாக அதன்பிரச்சாரம் அமைந்துள்ளது. அது உலகளவில் வலுவான பங்களிப்பை செலுத்தும்.

இந்திய மருந்து தொழில்துறையின் திறன் காரணமாக, கொவிட் காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கி நாங்கள் இதனை நிரூபித்துள்ளோம். நான் முன்பே கூறியதுபோல, எங்களது தடுப்பூசி உற்பத்தியும், போக்குவரத்துத் திறனும் அனைத்து மனித குலத்துக்கும் நிச்சயம் பலனளிக்கப் போகிறது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும், கோவிட்-19 தடுப்பூசி, சிகிச்சை, நோய்கண்டறிதல் ஆகியவை தொடர்பாக, அறிவு சார் சொத்து உடன்படிக்கைகளில் இருந்து விலக்குஅளிக்க உத்தேசித்துள்ளன. இதர பிரிக்ஸ் நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். பிரிக்ஸ் தலைமை பொறுப்பின் போது, டிஜிடல்சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் பிரிக்ஸ் ஒத்துழைப்பில் ஊக்கமளிக்க இந்தியா பாடுபடும். இந்த நெருக்கடியான ஆண்டில், ரஷ்ய தலைமையின் கீழ், மக்களுடன் மக்களுக்கான தொடர்பை அதிகரிக்கும் வகையிலான பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதில், பிரிக்ஸ் திரைப்பட விழா, இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளம்ராஜீய அதிகாரிகள் கூட்டங்கள் இதில் அடங்கும். இதற்காக, அதிபர் புதினுக்கு நான் எனது பாராட்டுதலை தெரிவித்துகொள்கிறேன்.

தலைவர்களே, 2021-ல் பிரிக்ஸ் அமைப்பு 15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. கடந்த ஆண்டுகளில் நாம் எடுத்த பல்வேறுமுடிவுகளை இந்த அமைப்பு மதிப்பிடலாம். 2021-ல் எங்களது தலைமையின் போது, மூன்று முக்கிய அம்சங்களை வலுப்படுத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முயலுவோம். பிரிக்ஸ் ஒற்றுமையை அதிகரித்து, இதற்காக உறுதியான நிறுவன விதி முறைகளை உருவாக்க நாங்கள் முயலுவோம். இந்த முயற்சிகளுக்காக அதிபர்புதினுக்கு மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்து தெரிவித்து கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

12-வது பிரிக்ஸ் மாநாடு காணொலிவாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமா போஸா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...