பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

அதிபர் அவர்களே,

உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

அதிபர் அவர்களே,

கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் நமது நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நட்புறவை பிரதிபலிக்கின்றன. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் மூலம் ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.

அதிபர் அவர்களே,

கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் தனித்துவமான அடையாளத்தை நிறுவியுள்ளது. இப்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் அதில் இணைய விரும்புகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

அதிபர் அவர்களே,

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்டது போல, பிரச்சினைகளின் தீர்வு அமைதியான வழிமுறைகள் மூலம் மட்டுமே களையப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. எதிர்காலத்திலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

அதிபர் அவர்களே,

இந்த அனைத்து அம்சங்களிலும் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இன்று மற்றொரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும், பல நன்றிகள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...