சானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்னிறைவு

கொவிட்-19 பெருந்தொற்றால் நமது நாட்டில் “ஹாண்ட் சானிடைசர்“ எனப்படும் கைகளில் தடவிக்கொள்ளும் கிருமிநாசினியின் தேவை பெருமளவில் அதிகரித்ததால் அதனை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகளின் தேவையும் கூடியது. இதனை ஈடுகட்டுவதற்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளாலும், நடவடிக்கைகளாலும் இன்று சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் தயாரிப்பதில் நமதுநாடு தன்னிறைவு பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யும் நிலையையும் எட்டியுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் விளைவாக இது சாத்தியபட்டுள்ளது. சிறு குறு நடுத்தரதொழில் துறையின் இந்த முயற்சிகளையும், சாதனைகளையும் அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

 

பெருந்தொற்று பரவத்தொடங்கிய ஆரம்பத்தில், சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் ஆகியவற்றின் தேவை நாளொன்றுக்கு 50 லட்சமாக இருந்தது. ஆனால் நமதுநாட்டின் உற்பத்தித்திறன் நாளொன்றுக்கு 5 லட்சமாகத்தான் இருந்தது. இதனால் பிற நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக பாட்டில்களின் விலையும், சானிடைசர் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில், சானிடைசரை பேக்செய்யும் பம்ப்புகள், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான அச்சுகளை உருவாக்குவதற்காகவும், அதற்கான இயந்திரங்களை வாங்கு வதற்காகவும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம், தனது தொழில் நுட்ப மையங்களுக்கு ரூ.26 கோடியை ஒதுக்கியது.
இந்ததொழில்நுட்ப மையங்கள் இரண்டு விதமான அச்சுகளை உருவாக்கி, உற்பத்தி நிறுவனங்களுக்கு அளித்தன.இதனால் இன்று நாளொன்றுக்கு 40 லட்சம் சானிடைசர் பொதிகலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2020, ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.30 ஆக இருந்த சானிடைசர் கலனின்விலை தற்போது ரூ.5.50 ஆக குறைந்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சானிடைசர் கலன்களை உற்பத்திசெய்ய துவங்கியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...