மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பிரான்ஸ் பிரதமர் வரவேற்பு

: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்துவரும் நிலையில் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் இதனை ஏற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி மேக் இன் இந்தியா திட்டத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்தத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாராகும் பொருட்களை வாங்கிபயன்படுத்த அவர் வலியுறுத்தி வரும் நிலையில் இதனால் உள்நாட்டில் உள்ள சிறுநிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக பயன்பெறுவர் என்று கூறியுள்ளார்.

தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் வர்த்தக தொடர்பில் இருக்க பிரான்ஸ் இந்தியா ஆகிய இருநாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு, சர்வதேசவிண்வெளி ஆய்வு, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றை மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக கையாள பிரான்ஸ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்குவருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா, பிரான்ஸ் ஆகிய இருநாடுகளும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியாக விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
விண்வெளி தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இருநாடுகளும் இணைந்து விவாதிக்க இமானுவேல் மேக்ரான் மற்றும் மோடி சந்திப்பு உதவியது.

மேலும் பாதுகாப்பு துறையை பலப்படுத்த இந்தசந்திப்பில் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே சக்தி, வருணா, கருடா உள்ளிட்ட இந்தியா-பிரான்ஸ் நாடுகள் இணைந்து செயல்படும் கூட்டுப் பயிற்சி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இருநாடுகள் இடையே உள்ள கடற்படைகூட்டு பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க தற்போது பிரான்ஸ் இமானுவேல் மேக்ரான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வருங்காலத்தில் இந்திய நிறுவனங்கள் பல அதிக லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...