ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி, கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.. இவருக்கு வயது 59.
ராஜஸ்தானின் ராஜ்சமந்த்தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி.. சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.
கடந்த 1994ல் நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றிபெற்று கிரண் தலைவரானார்.. அப்போதிருந்து 1999ம் ஆண்டு வரை 5 வருஷம் மேயர் பொறுப்பில் இருந்தவர்.. பாஜகவில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ல் நியமிக்கப்பட்டார்.
பிறகு கடந்த 2006ல் மகளிர் அணி தேசியதலைவராகவும், கடந்த 2011ல் அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்… கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியாக உயர்ந்தார்.. இதைதவிர அரசின் துறைசார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தவர்.
கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானார்.. பாஜக தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்… இப்படி பலவித உயர் பொறுப்புகளை தன்உழைப்பாலும், திறமையாலும், உயர்ந்தவர்.
இவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது… இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிரமான சிகிச்சைதரப்பட்டு வந்தது.. ஆனால், அதில் பலனின்றி காலமானார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |