வேளாண் சட்ட நன்மைகள் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்குறித்து வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியது. இடைத்தரகர்களே இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, விரும்பிய நபர்களிடம் விற்பனைசெய்ய இந்தசட்டங்கள் வழி செய்கின்றன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட சிலகட்சிகளின் தூண்டுதலால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வேளாண் சட்டங்களை வைத்து தமிழகமக்களை திசைதிருப்ப திமுக ஏற்கெனவே முயற்சித்து தோல்வி அடைந்தது. தற்போது டெல்லி போராட்டத்தைவைத்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்தும், அதனால்கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவசாயிகள், பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும்வகையில் டிச.8 முதல் பாஜக சார்பில் மக்கள்தொடர்பு இயக்கம் நடைபெற உள்ளது. பாஜகநிர்வாகிகள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து இந்தசட்டங்கள் குறித்து எடுத்துரைப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சிதொடங்கலாம். அந்த வகையில், கட்சி தொடங்க ரஜினிக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் சந்தேகம் இல்லை. கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும். ரஜினி கட்சியுடன் கூட்டணியா என்பதை தலைமைதான் முடிவுசெய்யும்.
திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி நடைபெறும் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

One response to “வேளாண் சட்ட நன்மைகள் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...