உங்களைப் போன்ற ஒருபிரதமரை பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்புதெரியவில்லை.ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறீர்கள் உங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தையும் தியாகம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுடைய உழைப்பு காண அங்கீகாரத்தையும்., பாராட்டையும் ஒரு நாளும் நீங்கள் பெறவில்லை.
ஆனால் சின்னஞ்சிறு விஷயமானாலும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நாட்டுமக்கள் இந்த தேசத்தை 60 ஆண்டுகளாக ஒருகுடும்பத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஆனால் ஐந்து வருடம் உங்களிடம் இந்தநாட்டை ஒப்படைத்து பொறுமைகாக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் போலி அரைவேக்காடு அறிவுஜீவிகளும்., சோம்பேறி மனிதர்களும். இந்த சோம்பேறி மனிதர்களால் நான்குபேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தையே அமைதியாக நடத்த முடியவில்லை.
ஆனால் அவர்கள் உங்களுக்கு இந்தநாட்டை வழிநடத்த அறிவுரை கூற ஒருநாளும் வந்ததில்லை.இந்த நாட்டின் பிரதமரான ஒரேகுற்றத்திற்காக இந்த மக்கள் உங்களை பழிவாங்கத் துடிக்கிறார்கள்.இந்த நாட்டின் மேன்மைக்காக கடின உழைப்பை செலுத்தியபிறகும் இவ்வாறான விமர்சனங்களை என்னால் கேட்கமுடியவில்லை.
இந்த நாடு வல்லரசு இலக்கைநோக்கி சொல்லும் உண்மையை இந்த மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாடு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தமக்களுக்கு இவை எல்லாம் வேண்டாம். அவர்களுக்கு தேவையானது எல்லாம் ஒருகிலோ துவரம்பருப்பு ஒரு ரூபாய்க்கும்., இலவச வெங்காயமும் கிடைத்தால்போதும்.
இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும். இந்தநாட்டு மக்கள் ஊழலுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். ஊழலை சகித்தும் கொள்கிறார்கள்.நாட்டில் பொறுமையாக நடைபெறும் வளர்ச்சிப்பாதையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த நாட்டு மக்கள் உருளைக்கிழங்கும் துவரம் பருப்பும் இலவசமாக கொடுப்பவர்களுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள்.இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து இந்தமக்களைப் பற்றி புரிந்துகொள்வது என்னவென்றால். யாரும் மாறுவதற்கு தயாராக இல்லை ஆனால் அனைவருக்கும் மாற்றம் வேண்டும்.
எல்லா மக்களும் 3G பேக்கேஜில் ஸ்மார்ட்போன் வைத்துக்கோண்டு வாய்கிழிய பேசுகிறார்கள்.300 ரூபாய்க்கு 3ஜி பிளான் செலவுசெய்கிறார்கள். ஆனால் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டதாக புலம்புகிறார்கள். இது நம்பும்படியாகவா இருக்கிறது.
பிரதமர் அவர்களே நீங்கள் உலகின் மிகசக்திவாய்ந்த முதல் 10 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளீர்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த நாட்டுமக்கள் கருதுவதில்லை. இது போன்ற செய்திகள் வரும்பொழுது இவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இந்த வயதில் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு கடமை உணர்ச்சி அற்பணிப்பு இவற்றின் மதிப்பு எல்லாம் இந்தநாட்டு மக்களுக்கு தெரியவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
அர்னாப் கோஸ்வாமி
குடியரசு தொலைக் காட்சியிலிருந்து.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |