பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், காய்ச்சல், குடல் புழுக்கள், பித்தம், ரத்தச் சோகை, லுகோடெர்மாவை குணமாக்கும். ரத்தத்திலுள்ள கழிவை நீக்கும்.
பாகற்காயை சாறாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் நலத்துக்கு அதிக பலன் கிடைக்கும். பாகற்காய் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். குடல்களில் இருக்கும் சிறு பூச்சிகளையும் வெளியேற்றும். மூலநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகங்களில் தோன்றும் கற்களைக் கரைத்தும், நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகவும், நீரை வெளியேற்றும் 'டையூரிடிக்' தன்மையுள்ளதுமான மருத்துவப் பயன்களை உடையது. அதிகாலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்தால் மஞ்சள் காமாலையும், மூட்டுவலிக் கோளாறுகளும் குணமாகும்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.