இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு

‘ராகுல் காந்தி நடத்தும் நடைப் பயணம் என்பது நடைப் பயணம் என்பதைத்தாண்டி அது ஒரு எண்டர்டைன்மென்ட். இந்த நடைப் பயணத்தினுடைய ரிசல்ட்டை நாம் ஒவ்வொரு தேர்தல்முடிவுகளிலும் பார்க்கிறோம். இந்திய ஒற்றுமை யாத்திரை என்று சொல்கிறார். ஆனால் இந்தியாவை பிரிக்கக்கூடியவர்களை வைத்துக்கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் கடுமையாக ஓடுவது, நடப்பது அவருக்கு நல்ல உடற் பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடன்சென்ற காங்கிரஸ்காரர்களும் நன்றாக ஃபிட் ஆகியிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு இதில் எந்தப்பயனும் இல்லை.

நம்முடைய மத்திய அரசு 2023 டிசம்பர் வரைக்கும் ஏழைகளுக்கான உணவுத்திட்டத்தை மறுபடியும் இரண்டுலட்சம் கோடி ரூபாய் செலவு செய்து நீட்டித்திருக்கிறார்கள். ஏற்கனவே கரோனா காலகட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நடந்து கொண்டிருந்தது. அதை 2023 டிசம்பர்வரை நீட்டித்துள்ளார்கள். உலகில் எந்த ஒருநாடும் செய்யாததை பிரதமர் மோடி செய்துள்ளார். கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். இதையாவது தமிழகஅரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள்.

போனமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு கொடுத்தீர்கள். இந்தமுறை கரும்பு இடம் பெறவில்லை. பனை வெல்லத்தைக் கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இந்நேரம் பனைவெல்லம் உற்பத்தி ஆரம்பித்து இருந்தால் இதனால் விவசாயிகளும் பயன்பெற்று இருப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்பொழுது வெறும்ஆயிரம் ரூபாய் மட்டும் அறிவித்துள்ளீர்கள். எனவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு”

மாநில தலைவர்

அண்ணாமலை 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...