தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிடபொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசியக்கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தமுறை தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் எப்படியாவது பாஜக பலத்தை நிரூபிக்கவேண்டும் என பல்வேறு வியூகங்கை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல்பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் விகே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசாமிற்கு மத்தியஅமைச்சர் நரேந்திர தோமர், கேரளத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி, புதுவைக்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |