விவசாயிகளிடம் இருந்து அரசு எதையும் எடுத்து செல்லவில்லை

குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்துக்கு மக்களவையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து உரையாற்றினார். புதியவேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார். ஆனால், பிரதமர் உரையைப் புறக்கணித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இந்நிலையில், குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து மக்களவையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில்ஈடுபட்டனர். பிரதமரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளிநடப்புச் செய்தனர்.

அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

தற்போது வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒருவிவாதம் எழுந்துள்ளது. வேளாண் சட்டத்தை யாரும் கேட்காதபோது ஏன் இயற்றப்பட்டது என கேட்கப்படுகிறது. வரதட்சணைக்கு எதிரான சட்டத்தைக் கூட யாரும் கேட்கவில்லை. ஆனால் இயற்றப்பட்டது. முஸ்லிம் பெண்களைக்காக்க முத்தலாக் தடுப்புச்சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத்தின் மீதான சட்டங்கள் நாட்டுநலனுக்காக இயற்றப்பட்டவை தான்.

பொதுத் துறை நிறுவனங்கள் முக்கியமானவைதான். ஆனால், தனியார் துறைகளும் முக்கியமானவை. தொழில்நுட்பம், மருத்துவம் என எதை எடுத்துக் கொண்டாலும் தனியார் துறையின் முக்கியத்துவத்தைப் பார்த்து வருகிறோம். இந்தியாவால் மனிதகுலத்துக்கு சேவைசெய்ய முடிகிறதென்றால் அது தனியார் துறைகளின் ஆதரவால்தான்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பலபெண் எம்.பி.க்கள் பேசினர். இது ஒருநல்ல அறிகுறி. அவை நட வடிக்கைகளில் தங்களது சிந்தனைகளை ஒலிக்கச்செய்த பெண் எம்.பி.க்களை பாராட்டுகிறேன்.

கரோனா பெருந்தொற்று பிரச்சினையை இந்தியா சிறப்பாகச் சமாளித்தது. மேலும் உலக நாடுகளுக்கும் இந்தியா உதவியது திருப்புமுனையாக அமைந்தது. தற்போது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ள வேண் டிய நேரமிது. இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஜனநாயகம் நமது ரத்தத்திலேயே உள்ளது. ஜனநாயகம் நம்மில் நெய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பிரச்சினைக்கு பிறகு ஒருபுதிய உலகம் பிறக்க உள்ளது. நாம் கொண்டுவந்த சுயசார்பு இந்தியா திட்டம், நமக்கு பேருதவியாக அமைந்தது. மேலும் புதிய உலகுக்கு ஒரு முக்கியப்பங்காக அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றால் உலகநாடுகள் பல பாதிக்கப்பட்டபோதிலும், நமதுநாடு அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. அதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் தான் காரணம். கடவுளின் தூதுவர்களாக அவர்கள் செயலாற்றி நம்மைக் காத்தனர். உலக நாடுகளில் நம்பிக்கை நட்சத்திரமாக, சுடரொளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வேளாண் துறையை சீரமைக்க 3 புதிய சட்டங்களைக் கொண்டுவந்தோம். இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்தன. இந்த சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதனால்தான் மூத்த அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேசி வருகின்றனர்.
சட்டம் தொடர்பாக விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தசட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் எந்த சந்தையோ, மண்டியோ மூடப்படவில்லை. விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை திட்டம் தொடரும். உண்மையைச் சொல்லப்போனால், சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தபட்ச ஆதரவுவிலை (எம்எஸ்பி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறு விவசாயிக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த சிலஆண்டுகளில் பலவிஷயங்களை செய்துள்ளோம். 21-ம் நூற்றாண்டில் 18-ம் நூற்றாண்டின் மனநிலையுடன் விவசாயத்தை சீர்திருத்த முடியாது. உலகளாவிய கோரிக்கைகளை நாம் படித்து அதற்கேற்ப நமது விவசாய முறைகளை மாற்றவேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து அரசு எதையும் எடுத்து செல்லவில்லை. புதியசட்டங்களில் புதிதாக சில அம்சங்களைச் சேர்த்துள்ளோம். அந்த அம்சங்களை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதுகட்டாயம் இல்லை என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தசட்டங்கள் குறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. தற்போதுள்ள சந்தைகள், மண்டிகளில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மண்டிமுறையை வலுப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன.

சமூகத்தில் மாற்றம் என்பது அவசியமானது. ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் சமூகத்தில் தற்போதுள்ள முறையை மாற்றி புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், சீர்மைப்பதற்கும் பாடுபட்டனர் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...