விவசாயிகளுக்காக இங்கு அரசியல் கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்

2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னையில் தொழிலதிபர்கள் வியாபாரிகள் ஆகியோருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொய்ப்பிரசார அரசியல் இங்கு அதிகளவில் செய்கிறார்கள்.வேளாண் சட்டத்தால் உங்கள் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக்கொள்வார்கள் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாடுகளை அழைத்துச் சென்று விடுகிறார்களா? விவசாயிகளிடம்தானே மாடுஉள்ளது? தற்போது பால் உற்பத்தியில் இந்தியாதான் நம்பர்-ஒன் நாடாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. விவசாயிகளுக்காக இங்கு அரசியல் கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதில், “இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்களை பேச்சுவார்த்தை மூலம்மீட்டவர் மோடி. தமிழகத்தில் இருந்து ஒரு பாஜக எம்.பி கூட இல்லாவிட்டாலும் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. தமிழகத்திற்கு சைனிக் பள்ளிகள் கொண்டுவரப்படும். தமிழகம் வளர்ச்சி பெற நல்லாட்சி கிடைக்க வேண்டும்.விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் யார்?போராட்டக் களத்துக்கு சென்று ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரென்றால் இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்குசென்று கொள்முதல், பொது விநியோகத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உலக வர்த்தக சட்டத்தில் கையெழுத்திட்ட 2013 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தவர்கள்தான் என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ...

தேசத்தைக் கட்டியெழுப்புவதில்  முயற்சிகளில் உறுதியான பங்காளியாக இருந்தார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ...

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.