பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக்கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டிமுடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துமாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டிமுடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதியதிட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட்ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன்பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...