தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு எடுத்து, அதே அளவு சுத்தமான நல்லெண்ணெயையும் சேர்த்துக் கலக்கிக் குடிக்கச் செய்து விட்டால், சில சமயம் வாந்தி உண்டாகும். வாந்தி எடுத்தாலும் பாதகமில்லை. பாம்பு விஷம் முறிந்து விடும். ஒரே வேளை போதும்.
நட்டுவாக்களி, தேள் கொட்டி விட்டால் விஷம் நீங்க தும்பை இலையைக் கொண்டுவந்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்குக் கொடுத்தால், உடனே விஷம் முறிந்து கடுப்பு நிற்கும். தேவையானால் கடிவாயிலும் தும்பை இலையைத் தேய்க்கலாம்.
தும்பை இலையை எலுமிச்சம்பழச் சாறு விட்டு மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து அத்துடன் அதே அளவு சுத்தமான நல்லெண்ணெய் விட்டுக் கலக்கி, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் பெரும்பாடு குணமாகும். இந்தச் சமயம் பத்தியம் இருக்க வேண்டும்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.