பொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி

நம் நாட்டின் பொம்மை தயாரிப்புதொழிலில் எவ்வளவு வலிமை மறைந்து இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது, சுயசார்பு இந்தியா பிரசாரத்தின் ஒருபெரிய பகுதியாகும்.

நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியில் நாம் எல்லாம் ஒரு அங்கமாகமாறி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

கலாசாரத்தை வலுப்படுத்த…இது ஒருவணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. இது நாட்டின் பழமையான அழகான விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான தொடர்புஆகும்.

பொம்மைகளுடனான நமதுஉறவு, நாகரிகத்தை போலவே பழமையானது. நமது கோவில்கள், பொம்மை தயாரிக்கும் வளமையான கலாசாரத்துக்கு சான்றாக நிற்கின்றன.

இந்தகண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த 1000-க் கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர், பள்ளிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள்வரை பங்கேற்கிறார்கள் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இது பொம்மை வடிவமைப்புகள், புதுமை, தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங்வரை உங்கள் அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு மன்றமாக இருக்கும்.

இந்த கண்காட்சியில், ஆன்லைன் விளையாட்டு துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிய உங்களுக்கு வாய்ப்புகிடைக்கும். இங்குள்ள குழந்தைகளுக்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதை காண விரும்பினேன்.

 

இந்திய பொம்மைககள்இந்திய வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக இருந்த மறுபயன்பாடு மறுசுழற்சி கலாசாரத்தை திட்டமிடுகின்றன. பொம்மை உற்பத்தியாளர்கள் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தவேண்டும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டுக்கும் சிறப்பான பொம்மைகளை உருவாக்கவேண்டும் என்று நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பொம்மைகளில் நாம் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாமா?

பொம்மை தயாரிப்பு துறையில் நாம் சுயசார்பு அடைய வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியகலைஞர்களின் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகிற பொம்மைகள், வெளிப்புற எண்ணங்களை அவற்றுடன் கொண்டுவந்தன. நாம் இந்த சூழ்நிலையை ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்காக நாம் கூடுதல் குரல்கொடுக்க வேண்டும்.

பொம்மை திரள்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பு உண்டு.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...