‘ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடி இலக்கை எட்டும்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
டில்லி பாரத் மண்டபத்தில் 120 நாடுகள் பங்கேற்ற, ஜவுளி தொடர்பான பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சி பிப்.14 முதல் பிப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பிரதமர் மோடி, இந்த கண்காட்சியை பார்வையிட்டார். கண்காட்சியில் அவர் பேசியதாவது:இங்கு வரும் தொழில்முனைவோர் 120 நாடுகளின் கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பாரத் டெக்ஸ் நமது பாரம்பரியம் மற்றும் விக்ஸித் பாரத்தின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. நாம் விதைக்கும் விதை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
2025ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, குறிப்பாக நீண்ட இழை பருத்தி ரகத்தின் உற்பத்தியை அதிகரிக்க, ஐந்து ஆண்டு பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்படிதேசிய பருத்தி தொழில்நுட்ப இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது நம் நாடு, ஜவுளி ஏற்றுமதியில் உலகில் ஆறாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். இதை மும்மடங்காக உயர்த்தி, 9 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, 2030ம் ஆண்டுக்கு முன்னதாகவே எட்டப்படும் என்று நம்புகிறேன். அதிகம் பேருக்கு வேலை அளிக்கும் இந்த துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 11% பங்களிக்கிறது,
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |