நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். இந்நிலையை 'தாழ்நிலை சர்க்கரை' என்று குறிப்பிடுவர்.
பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60க்கும் குறைவாக (Blood Sugar Level <60) வரும்போது, ஒருவருக்குத் தாழ்நிலைச் சர்க்கரை உள்ளதாகச் சொல்லலாம்.
தாழ்நிலை சர்க்கரை ஏற்படக் காரணங்கள்
அவர் குறைவாக சாப்பிடுவதால்
அவர் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரப்பதால்
அவர் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதிகமாகிவிடும்போது.
அவர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தாழ்நிலை சர்க்கரையை அறியும் முறைகள்
ஒருவருக்கு 'தாழ்நிலை சர்க்கரை' உள்ளதா என அறிய
தள்ளாடுதல்
இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது (மூச்சு இறைப்பது)
அதிக வியர்வை வெளிப்படுதல்
பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருத்தல்
தலைச்சுற்றல் உண்டாதல்
பசி அதிகம் ஏற்படுதல்
கண் பார்வை மங்குதல்
சோர்வும் களைப்பும் உண்டாதல்
தலைவலி உண்டாதல்
எரிச்சல், ஆத்திரம் ஏற்படுதல்
மயக்க நிலை ஏற்படுதல்
போன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருப்பதாக உணர்ந்தால், அவருக்குத் தாழ்நிலை சர்க்கரை இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வை அவர் அடைய வேண்டும்.
தாழ்நிலை சர்க்கரை – பக்கவிளைவுகள்
நீரிழிவுநோய் உடையவருக்கு அவ்வப்போது தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். தாழ்நிலை சர்க்கரை ஏற்படும்போது அதன் பக்க விளைவுகளாக அவர்களுக்கு,
உடல் எடை அதிகரிக்கும்
அவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.
அவர்களுக்கு இரத்தசோகை நோய் ஏற்படும்
அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்
இந்த அறிகுறிகள் இருப்பதாக அறிந்தால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உரிய சிகிச்சையை பெற வேண்டும்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு சிலருக்கு, இரவு நேரங்களில் தூக்கத்திலேயே தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். இந்நிலை, மயக்க நிலையை (கோமா நிலையை) ஏற்படுத்தும். அவர்கள் தூங்கும்போதே கூட இறந்துபோக நேரிடலாம்.
இந்நிலை மிகவும் அபாயகரமானது; எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் உறங்கச் செல்வதற்கு முன்பாக சிறு உணவு பால், ஸ்னாக்ஸ் போன்றவற்றில் சிறிது உட்கொள்ள வேண்டும். இதனால் தாழ்நிலை சர்க்கரை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
அதிகாலை எழுந்திருக்கும்போதே கூட சிலருக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும். அவர்கள் உடனே நடை பயிற்சி அல்லது ஏதேனும் வேலைகளைச் செய்யக்கூடாது. ஏதேனும் சிறிது சாப்பிட்டு (அ) பால் அருந்திவிட்டுத் தம் பணிகளைத் தொடங்க வேண்டும்.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.