பொம்மைத் தொழிலில் இந்தியக் கைவினைக்கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்- ஜிதின் பிரசாதா

பொம்மைத் தொழிலில் இந்தியக் கைவினைக்கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமெனவும், பொம்மைகள் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார்.

2024 ஜூலை 8, அன்று புதுதில்லியில் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு, இந்திய பொம்மை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ‘பொம்மை தொழில் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர்,  பொம்மை தயாரிப்பில் இந்தியா சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார்.  இந்திய பொம்மை தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டுமென்று கூறிய அவர், பொம்மைகள் மூலம் குழந்தைகள்  கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும் வளர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் உரையாற்றுகையில், அரசின் முன்முயற்சிகள் காரணமாக, இந்திய பொம்மைத்தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  பொம்மை உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...