2 நாள் சுற்றுப் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் நேற்று வழிபாடுசெய்தார்.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த சக்திபீடத்தில் உள்ள காளிஅம்மனை வழிபட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து மனிதகுலம் விடுபடவேண்டும் என காளி அம்மனிடம் நான் பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்தார். காளி அம்மன் மேளா (கொடை விழா) இங்கு நடைபெறும் போது இந்தியாவில் இருந்தும் இங்குவந்து பங்கேற்கின்றனர்.
இங்கு பலதேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஒருசமூக நலக்கூடம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் காளி பூஜை நிகழ்ச்சியின் போது இங்கு வருபவர்கள் தங்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த சமூக நலக்கூடம் பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம், இயற்கை சீற்றத்தின்போது பாதிக்கப்படும் மக்கள் தஞ்சம் அடையலாம், மக்கள் சேவையில் பலவிதங்களில் இக்கூடம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள 41 சக்திபீடங்களில் இந்த ஜோஷேஸ்வரி காளி கோவிலும் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இந்துமன்னர் ஒருவர் இக்கோவிலைக் கட்டியதாக சான்றுகள் கூறுகின்றன. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்து தனிநாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன்விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வங்காளதேசம் சென்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஓராண்டுகாலமாக வெளிநாடு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை.
எனவே கொரோனா தொற்று பரவலுக்குபிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக வங்காளதேச சுற்றுப்பயணம் அமைந்தது. பிரதமர் மோடி தனிவிமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து பிரதமர் மோடிக்கு பூங்கொத்துகொடுத்து வரவேற்றார்.
அதன்பின் 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் காளிகோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |