டில்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார். தமிழக மக்கள் சேவையில் பிரதமர் மோடியின் அக்கறை, தொலைநோக்குப்பார்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
5 நாள் பயணமாக டில்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் கவர்னர் ரவி ஆலோதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் அக்கறை
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |