சாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்துவருகிறார்.
சமீபத்தில் திருச்சி மாநருக்கு சென்ற அவருக்கு கட்சிதொண்டர்கள் தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது ஒரு போட்டோகிராபர் விழுந்துவிட்டார். அவர் விழுந்தந்தில் லட்சுமணன் என்கிற தொண்டரின் கால் முறிந்துவிட்டது. இதை கவனித்த அண்ணாமலை, உடனே லட்சுமணனை மருத்துவமனையில் சேர்க்கும்படி கட்சியின் மருத்துவர்அணிக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். அவர்களும் திருச்சி தனியார் மருத்துவ மனையில் சேர்த்து ஆப்பரேஷன் செய்து இருக்கிறார்கள்.
இதற்கான செலவுகளை மருத்துவர் அணி மாநிலதலைவர் டாக்டர் விஜயபாண்டியன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். லட்சுமணன் குணமானதும், அவரை வீட்டில் கொண்டுபோய் விட்ட கட்சி நிர்வாகிகள், அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்துகொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதனால், நெகிழ்ந்து போன லட்சுமணன், அண்ணாமலைக்கு மனம் உருக நன்றிசொல்லி இருக்கிறார். அண்ணாமலையின் இந்த செயலை அனைவரும் மெச்சி வருகின்றனர்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |