சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி “ஒரே பூமி ஒரே சுகாதாரம் “(ஆரோக்கியம்) என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.
வசுதேவ குடும்பம் (உலகமே ஒரே குடும்பம்) என்பதே இந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரம். அதற்காக இந்த தேசம் தன் எல்லையை என்றும் விரிவுபடுத்தயதும் இல்லை. அந்நிய தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியதும் இல்லை. மாறாக உலக நன்மைகளை பற்றி மட்டுமே சிந்தித்துள்ளது. எனவே அந்த பண்பாட்டினில் இருந்து வந்த பிரதமரின் பேச்சினில் எந்த வியப்பேதும் இல்லை.
கொரோன கொடிய நோய் தொற்று காலத்தில், உலகநாடுகள் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்த நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் தொழில்நுட்பங்களை, நோய் தடுப்பு சாதனங்களை, தடுப்பூசிகளை வணிக மயமாக்க எத்தனித்த நிலையில், இந்தியா மட்டுமே உலக நன்மைக்காக யோசித்தது. அது கொரோனா தடுப்பூசி மீதான காப்புரிமையை உலக வர்த்தக மையம்கைவிட்டதாக இருக்கட்டும், சொந்த நாட்டினில் தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருந்த போதிலும் அதை உலகுக்கும் கிடைக்க செய்ததாக இருக்கட்டும். மேலும் 500 கோடி தடுப்பூசிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்வோம் என்று சமீபத்திலும் முழங்கியதாக இருக்கட்டும் என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
தடுப்பூசிக்கான காப்புரிமை கைவிடப்படுமே என்றால் அது மிக மலிவான ஒன்றாக மாறிவிடும். பாரதம் உரிய நேரத்தில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததினால் உலகின் பல ஏழை நாடுகளில் முன்கள பணியாளர்கள் நோய்தடுப்பு கவசத்தை பெற்று மக்களை காத்துள்ளார்கள்.
மேலும் அக்டோபர் 02- 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரமான இந்தியா என்றார், இன்று “ஒரே பூமி, ஒரே சுகாதாரம்” என்கிறார். சுகாதாரமான இந்தியா பொது இடங்களில் குப்பைகளை அகற்றுவதை பற்றி மட்டுமே பேசவில்லை , அது பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்து, மக்கும் குப்பைகளுக்கு ஊக்கம் தருகிறது, நீர் நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுத்து வருகிறது. நாட்டுக்கு 11 கோடி கழிப்பறைகளை தந்து நாட்டில் திறந்த வெளி கழிப்பறைகளே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் கட்டுப்படுத்த பட்டுள்ளது.
அதேபோன்று “ஒரே சுகாதாரம்” என்ற திட்டத்தை பாரதம் உலகுக்கு முன்னெடுக்கும். இதன் மூலம் ஏழை நாடுகளின் ஆரோக்கியம் மட்டுமல்ல, காடுகள் அழிப்பை கட்டுப்படுத்தி, மரபு சாரா எரி சத்திக்கு முன்னோடியாக இருந்து. இதன் மூலம் உலகின் குருவாகவே பாரதம் மாறும். அந்த காலம் வெகுதூரத்திலும் இல்லை.
தமிழ்தாமரை விஎம் வெங்கடேஷ்
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |