நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக காவல்துறை மரியாதை

நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும்விதமாக அவரது இறுதிச் சடங்கின் போது காவல்துறை மரியாதை அளிக்க முடிவுசெய்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதிகேட்டது. தேர்தல் ஆணைய அனுமதி அளிக்கப் பட்டதை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக் திடீர்மாரடைப்பு காரணமாக நேற்றுக்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. எக்மோ கருவியுடன் சிகிச்சையில் இருந்த அவருக்கு காலையில் மீண்டும் ஏற்பட்டமாரடைப்பு காரணமாக மருத்துவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரதுஇல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். திரைப்படத்தில் வசனம் பேசுவது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டியவர்.
அப்துல்கலாம் வேண்டுகோளை ஏற்று ஒருகோடி மரம்நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றவர்.

தனது அயராத பணியினால் 33.5 லட்சம் மரங்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் நடுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். பல லட்சம் இளைஞர்கள் அவர் வழியைப்பின்பற்றி மரம் நட்டு வருகின்றனர். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரதுமறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மரம்நட்டு மரியாதை செலுத்துகின்றனர்.

திமுக, அதிமுக பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட சமகால தலைவர்கள் அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் விவேக். அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது சமூகபொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அவர் முன்னின்று எடுத்தமுயற்சிகளை அரசின் அனைத்து தரப்பினரும் அறிவர்.

தான் இறப்பதற்கு 2 நாட்கள் முன்னர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம்காட்டுவதை அறிந்துதான் தடுப்பூசி போடுவதை ஒருஇயக்கமாக மாற்றி சுகாதாரத்துறை செயலருடன் இணைந்து விழிப்புணர்வுபேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகர் விவேக் மறைவுக்கு அரசு மரியாதை தரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல்நடைமுறை உள்ளதால் அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்பதால் அரசின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. விவேக்குக்கு அரசு மரியாதையாக காவல்துறை மரியாதை செலுத்த அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விவேக்குக்கு இறுதி அஞ்சலியாக காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்க அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...