ஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய்வு: 12 மாநிலங்களுக்கு 17 ஆயிரம்டன் வழங்க உத்தரவு

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் கையிருப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கரோனா தொற்றால் மோசமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செயற்கைசுவாசம் அளிக்க மருத்துவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப் படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன்தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தகவல்வெளியானது.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.

மருத்துவமனைகளில் இப்போது உள்ள ஆக்ஸிஜன்கையிருப்பு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 12 மாநிலங்களில் அடுத்த 15 நாட்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவுகுறித்து இக்கூட்டத்தில் பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார். இந்த மாநிலங்களுக்குட்பட்ட மாவட்டளவிலான நிலவரமும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு தடையின்றிசெல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் நிரப்பும் தொழிற்சாலைகள் 24மணி நேரமும் இயங்க அனுமதிவழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உருக்கு ஆலைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. நைட்ரஜன் எரிவாயு எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளை சுத்தம் செய்து, அவற்றை ஆக்ஸிஜனை விநியோகம் செய்ய பயன்படுத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்கள் கரோனாதொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு அடையாளம் கண்டது. இந்த மாநிலங்களுக்கு வரும் 20-ம் தேதி 4,880டன், 25-ம் தேதி 5,619 டன், 30-ம்தேதி 6,593 டன் மருத்துவ ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு டெண்டர் கோர உத்தரவிடப்பட்டுள்ளது.

One response to “ஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய்வு: 12 மாநிலங்களுக்கு 17 ஆயிரம்டன் வழங்க உத்தரவு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூல ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம் 'தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தா ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசு -பிரதமர் மோடி சாடல் '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை க ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை கேள்வி உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...