ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் போதியளவில் கிடைப்பதை உறுதிசெய்ய அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டின் பலபகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, பாதிக்கப்பட்டவா்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் இருப்பில் உள்ள ஆக்சிஜன், அவற்றுக்கான தேவை, உற்பத்தி தொடா்பான ஆய்வுக்கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆக்சிஜன்தேவை தொடா்பாக மத்திய அரசின் சுகாதாரம், உருக்கு, சாலைப் போக்குவரத்து, தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தகஊக்குவிப்பு ஆகிய துறைகளைச்சோ்ந்த பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை பிரதமருடன் பகிா்ந்துகொண்டனா்.

அதிக ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகியவற்றில் தற்போதைய இருப்பு, ஆக்சிஜன் கிடைத்துவரும் அளவு, அடுத்த 15 நாள்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன்அளவு ஆகியவை குறித்து பிரதமா் கேட்டறிந்தாா்.

மேற்கண்ட 12 மாநிலங்களுக்கும் வரும் 20, 25, 30 ஆகியதேதிகளில் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறித்து தெரிவிக்கப் பட்டது. அதை தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்தத்தேதிகளில் முறையே 4,880 மெட்ரிக் டன், 5,619 மெட்ரிக் டன், 6,593 மெட்ரின் டன் ஆக்சிஜன் விநியோகிக்க முடிவுசெய்யப்பட்டது.

அதிகரித்துவரும் ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தித்திறன் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஒவ்வோா் ஆலையிலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

உருக்கு ஆலைகளில் உபரியாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டா்களை மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கபட்டது.

ஆக்சிஜன் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகங்களுக்கும் இடையே ஒத்துழைப்புஅவசியம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். நாடுமுழுவதும் ஆக்சிஜன் சிலிண்டா்களைக் கொண்டுசெல்வதற்கு தடையற்ற போக்குவரத்தை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை கடந்து செல்லும்போது எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய்குமாா் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள தகவல்: ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடா்ப்பாடும் கரோனாநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தீவிரபாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

ஒருமாநிலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் ஆக்ஸிஜனை விநியோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவேண்டாம். அதனை பிற இடங்களுக்கும் நேரக் கட்டுப்பாடின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கவும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...